பக்கம் எண் :

80மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்


10. மேலை மொழிநூலாரின்
மேலோட்டக் கொள்கைகள்

     இற்றை அறிவியல்களெல்லாம் மேனாடுகளில் தோன்றி வளர்ந்து
வருகின்றமையின் ஏனைத் துறைகளிலும் மேலையர் சொல்வதெல்லாம்
மேலான அறிவியலுண்மை யெனப் பலர் கருதுகின்றனர்.

     தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாதலாலும், மொழிநூல்
முதன்முதல் தமிழிலேயே கருக்கொண்டமையாலும், அமைப்பில் மட்டுமன்றி
இருவகை வழக்கிலும் தமிழே சிறந்து வந்திருப்பதனாலும், மொழிநூற்கு
அடிப்படையான இலக்கணம் கி.மு. 10ஆம் நூற்றாண் டிலேயே தமிழில்
முழுநிறைவாகத் தோன்றிவிட்டமையாலும், சமற்கிருத இலக்கணத்திற்குத்
தமிழிலக்கணமே மூலமாதலாலும், மொழிநூல் என்னும் அறிவியல்
குமரிநாட்டுத் தமிழர் கண்டதின் வளர்ச்சியேயன்றி, மேலையர் புதுவதாகப்
புணர்த்த தாகாது.

     முதன்முதல் தமிழகத்தில் வந்து வழங்கிய அயன்மொழி வட மொழியே
யாதலால், அக்காலத்து மொழிகளைத் தென்மொழி வடமொழி யென இரு
வகுப்பாகவும், தென்மொழியைச் செந்தமிழ் கொடுந்தமிழ் என
இருவகையாகவும், செந்தமிழை இயற்சொல் (Primitives) திரிசொல்
(Derivatives) என இரு கூறாகவும், வகுத்து; கொடுந்தமிழ்நாட்டுச் சிறப்புச்
சொற்களை மட்டும் திசைச்சொல் (Provincialism) எனத் தழுவி;
திரிசொற்களை யெல்லாம் முதனிலை, ஈறு, உருபு, இடைநிலை, புணர்ச்சி,
சாரியை, திரிபு (விகாரம்) என ஏழுறுப்பாகப் பகுத்து, இருவகைச் சொற்கும்
இயற்பொருள் ஆக்கப் பொருள் ஆட்சிப் பொருள் வேர்ப்பொருள்
("மொழிப்பொருட் காரணம்") என்னும் நால்வகைப் பொருளுங் கண்டு;
வலித்தல் மெலித்தல் தொகுத்தல் விரித்தல் நீட்டல் குறுக்கல் என்றும்,
போலி என்றும், சிதைவு என்றும் குறை என்றும், மரூஉ என்றும், சொற்றிரிபு
முறைகட்குப் பெயரிட்டும்; கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்
காப்பியத்திற்கு முன்பே, மொழிநூற்கு அடிகோலிவிட்டனர் நம் மூதறிஞரான
முன்னோர்.

     தொல்காப்பியம், "முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்"
புலந்தொகுத்த சார்பிற் சார்பு நூலாதலின், மேற்கூறிய மொழிநூற் கூறுகளுள்,