பக்கம் எண் :

மொழிநூல்105

  கள் (பன்மையீறு)-க-க
தமிழ் துடவம் (நீலமலைவாணர் மொழி)
மகன் மக்
மண்டை மட்
முள்-மள்-மழ-மக-மகன்-மக்.
மொள்-மொண்டை(மொந்தை)-மண்டை-மண்ட்-மட்.
(6) வாய்ப்பயிற்சியால் எல்லா மொழியொலிகளையும் ஒருவர் பயின்று கொள்ளலாம் என்பது.
      சில மொழியொலிகள் அயல்நாட்டு மக்களால் ஒலிக்க இயலாமையால், அவற்றை அவை வழங்கு நாடுகளிற் பல்லாண்டோ சில தலைமுறையோ குடியிருந்துதான் பயிலமுடியும்.
      ஓர் அமெரிக்கர் சென்னையில் அண்ணாமலைநகருக்குப் புகை வண்டிச் சீட்டு வாங்க வேண்டியவர் தவறாக ஒலித்ததனால், ஆனைமலக்கு வாங்கிச் சென்றுவிட்டார்.
      முத்திற மொழிநூல்போல் வண்ணனை மொழிநூற்குப் போதிய ஆராய்ச் சிக்கிடம் இன்மையாலேயே, இத்தகைய இழிதகைய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இது ?வேலையில்லாத மஞ்சிகன் (அம்பட்டன்) வெண்கழு தையைப் பிடித்துச் சிரைத்தானாம்? என்னும் பழமொழியையே நினை வுறுத்துகின்றது.
      7. அயன்மொழிச் சொற்களுள் சிலவற்றின் வடிவுகொண்டு, பிறவற்றின் வடிவையும் ஒத்தமைவு (Analogy) முறையில் அமைத்துக் கொள்ளலாம் என்பது.
      இலக்கண வகையில் ஒத்தசொற்கள் பொதுவாக ஓரொழுங்கு பட்டிருப்பினும், சிறுபான்மை நெறிக்கு விலக்காகவு மிருப்பதால், ஒத்தமைவுமுறை எல்லாவிடத்துஞ் செல்லாததாகும்.

சொற்புணர்ச்சி

  எ-டு:
வலிமிகல்      மெலிமிகல்
வாழைப்பூ       தாழம்பூ (தாழை+பூ)
அவரைக்காய்    துவரங்காய் (துவரை+காய்)
புன்னைத்தோப்பு தென்னந்தோப்பு (தென்னை+தோப்பு)
இறந்தகால      வினையெச்சம்
சொல்-சொல்லி   தெள் - தெள்ளி
நில் - நின்று    கொள் - கொண்டு
வில் - விற்று    கள் - கட்டு