பக்கம் எண் :

114வண்ணனை மொழிநூலின் வழுவியல்

     (4) தமிழ்ப்பற்றற்ற பிராமணத் தமிழ்ப் புலவரையும் பண்டாரகரையும் ஈருலகத் தமிழ் மாநாட்டிலும் சேர்த்துக் கொண்டார்.
     (5) எனக்குத் தெரிந்தவரை, என்றேனும் இந்தியை எதிர்க்கவுமில்லை; மறைமலையடிகளைப் பாராட்டவுமில்லை.
     பர்.தெ.பொ.மீ. யைமட்டும் அறுபான் ஆண்டு நிறைவு விழாவிற் பாராட்டினார்; அவரைத் தம் ஆசிரியராகவும் ஒரு நூலிற் குறித்திருக்கின்றார்.
     இவர் தமிழிற் பெரும்புலவரு மல்லர்.
     இவரது `உலகத் தமிழ்ப் பேரவை`ச் சார்பில் ஈருலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன.
முதலாம் உலகத் தமிழ் மாநாடு (கருத்தரங்கு)
கோலாம்பூர், 1966
இதன் குறைபாடுகள்
1. முதல் மாநாடாயிருந்தும் தமிழ்நாட்டில் நடைபெறாமல் அயல் நாட்டில் நடைபெற்றமை.
     2. அரசியல் தொடர்பு கொண்டமை.
     உலகத் தமிழ்மாநாடு தமிழ்மொழி யிலக்கிய கலை நாகரிகம் பற்றியதாதலின் தமிழறிஞரையே முற்றும் சார்ந்ததேனும், அரசியல் தொடர்பு கொண்டது பெயர் விளம்பரத்தைப் பெருக்கற்கேயென அறிக.
     3. மறைமலையடிகள் கொள்கையர் விலக்கப்பட்டமை.
  4. தமிழ்ப் பகைவரும் அரசியற் கட்சித் தலைவரும் அழைக்கப் பெற்றமை.
  5. ஆங்கிலத்தில் நடைபெற்றமை.
(2) இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு (கருத்தரங்கு)-
சென்னை 1968
இதன் குறைபாடுகள்
     1. அரசியற் சார்பில் நடைபெற்றமை.