3. முடிபு |
உலகில் முதன்முதல் மொழியமைத்தவனும் மொழிநூல் கண்டவனும் தமிழனே, இதற்குச் சான்றாக, உலகிற்கு மொழிநூல் கற்பிக்கும் பணி மீண்டும் தமிழன் கைக்கு வந்துள்ளது. |
தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழிமட்டு மன்று முதற்றாய் மொழியும் உயர்தனிச் செம்மொழியுமாகும். |
"தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல்கிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை" என்று மறைமலையடிகள் கூறியது முற்றும் உண்மையே. |
கி.மு.1000 ஆண்டுகட்கு முன் தென்னாட்டிற்குக் குடிவந்த ஆரிய வகுப்பினரான பிராமணர், தமிழரின் வேளாண்மை மடத்தையும் தமிழவேந்தரின் முந்தியற் பேதைமையையும் கண்டு, தம் வெண்ணிறத் தையும் தம் முன்னோர் மொழியின் மூச்சியல் முழக்கொலிச் சிறப்பையும் துணைக்கொண்டு, தாமும் தம் வழியினரும் என்றும் தலைமையாயிருந்து இன்புறற் பொருட்டு, தம்மை நிலத்தேவரென்றும் தம் முன்னோர் மொழியைத் தேவமொழியென்றும் கூறி யேமாற்றித் தமிழரைத் தமக்கு அடிமைப்படுத்தி, அதற்கு அரணாகத் தமிழையும் வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளிச் சமற்கிருதத்திற்கு அடிப்படுத்தி விட்டனர். |
அறிவாராய்ச்சியும் உரிமையுணர்ச்சியும் விடுதலை வேட்கையும் மிக்க இக்காலத்தில் தன்மானத் தமிழர் தலைதூக்கும் போது, ஆரியப் பகைவர் குல வகையில் முன்போல் ஏமாற்ற எள்ளளவும் இடமின்மையால் தம் அடிவருடியாரைத் துணைக்கொண்டு, தமிழரை முன்னேற்றவடிப்படையான மொழித் துறையில் மட்டந்தட்டப் பார்க்கின்றனர். அதற்காகவே குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை மறைத்து, தமிழரைக் கிரேக்க நாட்டினின்று வந்தவராகவும் கலவையினத்தாராகவும் ஆரியரால் நாகரிகப் பட்டவராகவும் காட்டி, வரலற்றைத் தலைகீழாகவும் தவறாகவும் வரைந்து வருகின்றனர். |
மேலையர் இற்றை அறிவியல்களில் மேலோராயினும் தமிழைத் தமிழர் வாயிலாகக் கல்லாமையானும், பிராமணர் தமிழையும் தமிழரையும் பற்றித் தாழ்த்தி யெழுதியிருப்பதை முற்றும் நம்புவதானும், இற்றை மேற்பரப்பான சூழ்நிலைகள் உண்மைக்கு மாறாயிருப்பதை ஆய்ந்தறியாமையானும், குமரிநாட்டுத் தமிழனை நண்ணிலக் கடற்கரையானென்று |