| இதன் மறுப்பு |
இந்தியமொழிநூற்கு அடிமணை தொல்காப்பியர் காலத்திற்கு முந்திய தமிழிலக்கண நூல்களிலேயே இடப்பெற்றதென்பது, முன்னரே கூறப்பட்டது. 6. "இந்தியாவில் மிக முந்திய காலத்திலேயே நாட்டப்பெற்ற நான் மொழித் தொகுதிகளுள், இறுதியாக வந்தது ஆரியமொழிக் குடும்ப மாகும். அதற்கு முந்திவந்தவை திராவிடம், சீன திபேத்தம், ஆத்திரியம் என்பன." - பக். 373. |
| இதன் மறுப்பு |
திரவிடம் என்பது தமிழின் திரிபு. தமிழ் தோன்றியது இந்தியவாரியுள் மூழ்கிப்போன குமரிக்கண்டத்தின் தென்கோடியில். தமிழ் வடக்கே சென்று திரவிடமாகத் திரிந்து, திரவிடம் வடமேற்கே சென்று ஆரியமாக மாறி. அவ் ஆரியத்தின் ஒரு கிளையே கீழையாரியமாக வந்து இந்தியா விற்குட் புகுந்தது. ஆகவே, திரவிடம் வெளிநாட்டினின்று வந்ததன்று. 7. "ஆரியத்திற்குப் பின்பு திரவிட இலக்கியம் முந்தி வளர்ச்சி பெற்றது." - பக். 373. |
| இதன் மறுப்பு |
இந்தியாவில் மட்டுமன்றி உலகத்திலேயே முதன்முதல் தோன்றி வளர்ந்தது தமிழிலக்கியமே. அதன் தோற்றம் கி. மு. 10,000 ஆண்டுகட்கு முன். இந்திய ஆரியரின் முதல் இலக்கியம் வேதம் ஆகும். அதன் காலம். கி.மு.1500 - 1200. அதற்குப் பிற்பட்ட சமற்கிருத இலக்கண இசை நாடக நுல் களும் கணியம் மருந்துவம் முதலிய வேறு பலவும் பண்டைத் தமிழி லக்கியத்தைப் பின் பற்றியவையே. 8."பிரிக்கப்படாத இந்தியாவில் நூற்றிற்கு எழுபத்துமூவர்க்கு மேற் பட்டவர் ஆரியமொழிகளைப் பேசினர்." - பக். 374. |
| இதன் மறுப்பு |
| இது தவறான கணக்கு. ஆரியர் வருமுன் திரவிடமாகவும் திரவிடத் திரிபாகவுமிருந்த பல வடஇந்திய மொழிகள் இன்று ஆரியமாகக் கருதப் படுகின்றன. பி.தி (P. T.) சீநிவாச ஐயங்காரின் இந்தியக் கற்காலம்' (Stone Age in India) என்னும் நூலைப் பார்க்க. |