ஆராய்ச்சியாளருள்ளும், சிலர் நூலாராய்ச்சியாளர்; சிலர் வரலாற் றாராய்ச்சியாளர்; சிலர் மொழியாராய்ச்சியாளர்; சிலர் மதவாராய்ச்சியாளர். வரலாற்றாராய்ச்சியாளருள்;சிலர் பழம் பொருளாராய்ச்சியாளர்; சிலர் கல்வெட்டாராய்ச்சியாளர்; சிலர் காசாராய்ச்சியாளர்; சிலர் ஏட்டுச்சான் றாராய்ச்சியாளர்; சிலர் பரவை வழக்காராய்ச்சியாளர். சோழன் ஒருவன் ஒளவையார் ஒருவரை நோக்கி, கம்பர் அகல வனப் பியற்றுவதில் ஆற்றல் மிக்கவர் என்று சிறப்பித்துக் கூறியபோது, பின்னவர்,
இங்ஙனம் ஒவ்வொருவர் சிறப்புத் திறமையையும் அறிந்து,
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
ஒரு மொழியில் ஓர் அகரமுதலி தொகுத்தற்கோ திருத்தற்கோ இலக்கண அறிவு, சொல்லாராய்ச்சி, மொழியாராய்ச்சி, சொற்றொகுப்பு ஆகிய நாற்றிறம் வேண்டும். இவற்றை ஒருங்கேயுடையவர் தனிப்பட ஓர் அகர முதலியைத் தொகுக்கலாம் அல்லது திருத்தலாம்.
ஆங்கிலத்தில், சாண்சன் (Johnson), அன்னண்டேல் (Annandale), வெபுத்தர் (webster), சாண் ஆசில்வீ (John Ogilivie) முதலியோர் தனிப்பட்ட அகரமுதலி தொகுத்தவரே. தமிழிலும், வீரமாமுனிவர் என்னும் கான்சுத்தாந்தியசு பெசுக்கி (Constantius Beschi), பெப்பிரிசியசு (Fabricius), இராட்டிலர் (Rottler), போப்பு (Pope), பெர்சிவால் (Percival), வின்சுலோ (Winslow) முதலிய அயல்நாட்டாரும்; சந்திரசேகர பண்டிதர், கதிரைவேற்பிள்ளை, குமாரசாமிப் பிள்ளை முதலிய தமிழரும்; தனிப்பட்ட அகரமுதலி தொகுத்திருப்பதை அறிந்திருந்தும்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலியின் பெருந்தொகையான பல்வகைக் கழகக் கடும்பிழைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாக நான் வெயிட்டுக் காட்டியபின்பும்; அவ் வகரமுதலியைத் திருத்தப் பலர் வேண்டும் என்பதுபோல் ஏராளமாகச் செலவாகும் என்று, பொறுப்புவாய்ந்த பதவியிலுள்ள தமிழ்ப் பேராசிரியர் சொல்லிவருகின்றனர்.
ஆயினும், தமிழ்ப்பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகரின் தமிழறியாமையையும் ஆரியக் கூட்டத்தின் சாய்காலையும் துணைக்கொண்டு, எல்லாம் வல்லவராகத் தம்மைக் காட்டிக்கொள்ளும்