பக்கம் எண் :

மொழிநூல்79

      கோல் (Cole) என்பவர் 1867-ல் குடகுமொழியின் தொடக்க இலக் கணத்தை வெளியிட்டார்.
      சாண் பீம்சு (John Beames) என்பவர், 1867-ல் 'இந்திய மொழிநூற் சட்டகம்' என்னும் நூலையும், இக்கால இந்திய ஆரிய மொழிகளின் ஒப்பியல் இலக்கண மும்மடலங்களை முறையே 1872, 1875, 1879 ஆகிய ஆண்டுகளிலும் வெளியிட்டார்.
      குண்டர்ட்டு (Gundert) என்னும் செருமானிய ஐயர் 1868-ல் மலையாள - ஆங்கில அகரமுதலியை வெளியிட்டார்.
      1872-ல் ஆர்டென் (Arden) ஐயரின் தமிழ்தெலுங் கிலக்கணங் களும், பிரிகேல் (Brigel) என்பவரின் துளுவிலக்கணமும் வெளிவந்தன.
      1873-ல் போப்பு ஐயரின் 'துடவமொழி யிலக்கணச் சட்டகம்' வெளிவந்தது.
      1884-ல் ஏர்ணத்து துரோசு (Ernest Droese) என்பவரின் மாலத் தோப் (Malto) புகுமுக விலக்கணமும், 1890-ல் வில்லியம் சன் என்பவரின் கோண்டிச் சொற்றொகுதியோடு கூடிய இலக்கணமும், 1894-ல் கிற்றெலின் (Kittel) கன்னட ஆங்கில அகரமுதலியும், 1899-ல் மானியர் வில்லியம்சின் சமற்கிருத ஆங்கில அகரமுதலியும் வெளிவந்தன.
       இந்நூற்றாண்டில் ஆங்கிலத்தில் வெளிவந்த மொழிநூல்களுள் முதன் மையானவை, கிரையர்சன் (1903-28). எடுவர்டு சப்பீ, (Edward Sapir, 1921) ஆட்டோ செசுப்பெர்சென் (Jespersen, 1922), வெந்திரையசு, (Vendryes 1925), புளும்பீல்டு (Bloomfield 1933), பிரொடரிக்கு பாடுமேர், (Frederick Bodmer, 1944), கிளீசன் (Gleason, 1955), இலாகோவாரி (Lahohvary, 1963), பார்பெர் (1964)என்பவர் எழுதியனவாகும்.
      இவற்றுள் கிரையர்சன் தொகுத்த 'இந்திய மொழிப் பரப்பளவை' (Linguistic Survey of India)' இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகச் சிறப்புடையதாகும். அது 20 மடலங்கொண்டது; இந்திய மொழிகளை யெல்லாம் ஆய்ந்து 179 மொழிகளும் 544 நடைமொழிகளுமாகக் (Dialects) கணக்கிட்டு, ஒவ்வொன்றன் இயல்பையும் இலக்கிய விலக்கணங்களையும் குடும்பவுறவையும் எடுத்துக்காட்டுடன் விரிவாக விளக்குவது.
      சப்பீர் மொழியின் அமைப்பையும் வளர்ச்சியையும் கலப்பையும் அயலாரால் தழுவப் பெருந்தன்மையையும், செசுப்பெர்சென் மொழிகளின்