பக்கம் எண் :

மொழிநூல்99

      வட்டங்கூட்டுதல், வட்டம்பிரிதல், வட்டசட்டம், வட்டதிட்டம் என்பன வழக்கியன் மரபுச் சொற்கள். வட்டம் - வருத்த(வ.). இச்சொல் உருண்டையையுங் குறிக்கும்.
  வட்டம்-வட்டகை = சிறு நாட்டுப்பகுதி.
வட்டணம் = வட்டமான கேடகம். வட்டணம்-அட்டண(வ.).
வட்டணித்தல் = வட்டமாதல், வட்டமாக்குதல்,
வட்டணை = வட்டம், கேடகம், தாளக்கருவி, வட்டமான செலவு, உருண்டை.
வட்டா = கீழும் மேலும் பரப்பொத்த வட்டக்கிண்ணம்.
வட்டாரம் = நாட்டுப்பகுதி.
வட்டித்தல் = வட்டமாதல், சுழலுதல், உருட்டுதல்.
வட்டி = வட்டமான கடகப்பெட்டி, கூடை, படி, படியளவு,
வட்டிகை = சுற்றளவு, கூடை, பரிசல், வளைத்தெழுதும் தூரிகை
வட்டி- வட்டில் வட்டமான உண்கலம், நாழிகை வட்டில்,
வட்டை = சக்கரச் சுற்று வளைமரம், தேர், வட்டப்பக்கா.
வடகம் = கறிச்சக்குச் சேர்த்துத் தாளிக்கும் உருண்டை.
வடகம்-வடக(t) - வ.
வட்டை-வடை = வட்டமான பலகாரவகை. வடை- வடா(வ.). வடையம்= நெல்லிப்பழவடை, வெற்றிலை பாக்குப் பொட்டலம். வாடுதல் = வளைதல், சாய்தல், சோர்தல், மனமழிதல், மெலிதல், உலர்தல், பட்டுப்போதல்.
வாட்டம் = சாய்வு, வாட்டசாட்டம் = சாய்வுப்போக்கு.
வாடி- வளைந்த இடம், மதில், அடைப்பிடம், வளைசல், மண்டி. வாடி -வாடீ(வ)-வ.
வாடம் = வட்டம். ஒன்றறுவாடம் = ஒன்டுவிட்டொரு நாள்
வாடகை = சுற்று வட்டம், வட்டகை.
"அரசூர் வாடகையில்" (S.I.I. III 109). வாடகை - வாட்டிகா(வ.).
வாடகை-வாடை = சிற்றூர், தெரு. வழி. வாடை - வாட்டா(வ.).
     வள்-(வர்)-வரி = வளைந்த கோடு, கோடு எழுத்து. வர்-வார் - வாரம் = சரிவு, மலைச்சரிவு, தாழ்வாரம், கடல், வார் - வாரி=வளைந்த கடல்,