19 சமயமும் கொள்கையும் இம்மை மறுமை நலங்கட்கும் வீட்டின்பத்திற்கும் இறை வனருள் இன்றியமையாததென்னுங் கொள்கைபற்றி பண்டைத் தமிழரசர் தமக்கும் தம் குடிகட்கும் நலம் வருவித்தற்பொருட்டுத் தமக்கிசைந்ததொரு சமயத்தைக் கடைப்பிடித்து இறைவனை வழிபட்டு வந்தனர். தமிழரசருங் குடிகளும் முதலாவது ஐந்திணைத் தெய்வங் களை வணங்கி வந்தனர். குறிஞ்சிக்குச் சேயோன் என்னும் முருகனும், முல்லைக்கு மாயோன் என்னுந் திருமாலும், மருதத்திற்கு வேந்தன் என்னும் இந்திரனும், நெய்தற்கு வருணன்(வாரணன்) என்னும் கடலோனும், பாலைக்கு மாயோள் என்னுங் காளி(கொற்றவை)யும், தெய்வமாயிருந்தனர். வருண வணக்கம் நாளடைவில் நின்றுவிட்டது. இந்திர வணக்கம் கடைச்சங்கத் திறுதிவரையிருந்தது. மற்ற முத்தெய்வ வணக்கமும் நெடுகலுந் தொடர்ந்தது. கடைச்சங்க காலத்தில், காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரை யிலும் வஞ்சியிலும் பற்பல தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. புகாரிலிருந்த கோயில்கள் கற்பகக் கோயில், வெள்யானைக் கோயில், பலதேவர் கோயில், கதிரவன் கோயில், கயிலைக் கோயில், முருகன் கோயில், வச்சிரப்படைக் கோயில், சாத்தன் கோயில், அருகன் கோயில், நிலாக் கோயில், சிவன் கோயில், திருமால் கோயில் முதலியன. முருகன், சிவன், திருமால், பலதேவன் ஆகிய நால்வர்க்கும் எல்லாத் தலைநகர்களிலும் கோயில்கள் இருந்தன. தெய்வங்கள் பெருந்தெய்வம் என்றும் சிறுதெய்வம் என்றும் இருவகைப்படும். சமயத் தெய்வங்கள் பெருந்தெய்வமும் மற்றவை சிறுதெய்வமுமாகும். சைவம் வைணவம் ஆருகதம் பௌத்தம் பிரமம் உலகாயதம் என்னும் ஆறும் கடைச்சங்க காலத்து அறு சமயம் என்னலாம். அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நாலாறு சமயமாகப் பகுத்துக் கூறியது பிற்காலத்ததாகும், சிவவழிபாடும் |