பக்கம் எண் :

பழந்தமிழாட்சி13

தலைநகராகவும்; சோழர்க்கு உறையூர் கருவூர் அழுந்தூர் குடவாயில் திருவாரூர் தஞ்சை ஆயிரத்தளி (நந்திபுரம், பழையாறை, முடி கொண்ட சோழபுரம்), கங்கைகொண்ட சோழபுரம் என்பன அகநாட்டுத் தலைநகராகவும், புகார் (காவிரிப்பூம்பட்டினம்), நாக பட்டினம் என்பன கரைநாட்டுத் தலை நகராகவும்; சேரர்க்குக் கருவூர் என்பது அகநாட்டுத் தலைநகராகவும், வஞ்சி கொடுங் கோளூர் காந்தளூர்ச்சாலை என்பன கரைநாட்டுத் தலைநகராகவும் இருந்திருக்கின்றன.