பக்கம் எண் :

பழந்தமிழாட்சி25

6
அரசியல் வினைஞர்

     முத்தமிழ் நாட்டிலும், அரசியல் வினைஞர், பெருநாட்டுத் தலைநகர் சிறுநாட்டுத் தலைநகர்கள் ஊர்கள் ஆகிய மூவகையிடங்களிற் சிதறியிருந்தனர்.

     (1) பெருநாட்டுத் தலைநகரிலிருந்த வினைஞர் , அரசனுடைய ஆட்சிக்கு அடிப்படைத் துணையாயிருந்த அதிகாரச் சுற்றம் ஐம்பெருங் குழு என்பது. அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதர், ஒற்றர் என்னும் ஐந்து குழுவாரின் பெருந்தொகுதியே ஐம்பெருங் குழுவாகும்.

     தலைமையமைச்சனுக்கு உத்தர மந்திரி அல்லது மகாமந்திரி என்று பெயர்.

     தூதர், (தூதுவர்) அரசன் விடுத்த செய்திகளைப் பிற அரச ரிடத்துக் கொண்டு செல்பவரும், அரசனுடைய ஆணைகளை நாட்டதிகாரிகளிடத்தும் ஊரதிகாரிகளிடத்துங் கொண்டு செல்பவரும் என இரு பாலர். அரசதூதர் சட்டையுந் தலைப்பாகை யுமணிந்திருப்பர். அதனால் அவர்க்குக் கஞ்சுகமாக்கள் என்றும், சட்டையிட்ட பிரதானிகள் என்றும் பெயர். தலைமைத் தூதன் கஞ்சுக முதல்வன் எனப்படுவான்.

"சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
 கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர்"           
(26 : 137-8)

என்று சிலப்பதிகாரங் கூறுவதால், தூதர் பெருந்த தொகையினரா யிருந்தனர் என்பதறியப்படும்.

     ஐம்பெருங் குழுவிற்கு அடுத்தபடியாய், அதனினுஞ் சற்று விரிவாக இருந்த அதிகாரச்சுற்றம் எண்பேராயம் என்பது. கரணத் தியலவர் (கணக்கர்), கரும விதிகள் (அரசாணையை நிறைவேற்றும் அதிகாரிகள்,) கனகச் சுற்றம் (பண்டாரம் என்னும் பொக்கிசசாலையதிகாரிகள்)கடை காப்பாளர் (அரண்மனை வாயிற் காவலர்), நகரமாந்தர் (நகரப்பெருமக்கள் அல்லது வணிகப்பெருமக்கள்),