அரசனுடைய கொற்றப் பெயர்களை முன்னுறுப்பாகக் கொண்டி ருக்கும். சில பிரிவுகள் சிறுதனம் பெருந்தனம் என்றும், இடங்கை வலங்கை1 என்றும் இவ்விரு உட்பிரிவுகளைக் கொண்டிருந்தன. வில்லிகள் வாள்பெற்ற கைக்கோளர், பராந்தகக்கொங் கவாளர், பண்டிதச் சோழத்தெரிந்த வில்லிகள், உத்தமச் சோழத் தெரிந்த அந்தளகத்தார், சிறு தனத்து வடுகக்காவலர், வலங்கைப் பழம்படை களிலார், பலவகைப் பழம்படைகளிலார், சிங்களாந் தகத்தெரிந்த குதிரைச் சேவகர், மும்முடிச் சோழத் தெரிந்த ஆனைப்பாகர், பெருந்தனத்து ஆனையாள்கள் என்பன சில படைப்பிரிவுகளின் பெயராகும். படைத்தலைவர்: படைத்தலைவர்க்குப், படைமுதலி, தண்ட நாயகன், சேனைமுதலி, சேனாபதி, சாமந்தன் என்னும் பெயர்களும், பெரும்படைத் தலைவனுக்குப் பெரும் படைமுதலி, சேனாவரை யன், சேனாதிராயன், மகாதண்ட நாயகன், மகாசாமந்தன் என்னும் பெயர்களும் வழங்கின. நாயகன் என்னும் பெயர் சேரநாட்டில் நாயன் என வழங்கிற்று. முதலியார் நாயர் என்னும் பெயர்கள், முதலி நாயன் என வழங்கிற்று. முதலியார் நாயர் என்னும் பெயர்கள், முதலி நாயன் என்பவற்றின் உயர்வுப்பன்மை வடிவாகும். பொதுவாக, படைத்தலைமைக்கு அவ்வப் படைமறவருள் திறமை மிக்கவரும், பெரும் படைத்தலைமைக்கு அரசக் குடும்பத்தினரும் குறுநிலமன்னரும் உழுவித்துண்ணும் வேளாண் குடித்தலை வரான வேளிருமே, அமர்த்தப்பெற்றனர். படைகளை மேற்பார்த்தற்குப் படைகாண்பார் என்று சில அதிகாரிகள் இருந்தனர். படைக்கலங்கள்: அமைதிக்காலத்தில், மெய்காவற் படை பரிவாரப்படை நிலைப்படை ஆகிய படைகள் கையாளும் படைக் கலங்களைத் தவிர, மற்றப் போர்க்கருவிகளெல்லாம் படைக்கலக் கொட்டில் என்னும் ஆயுத சாலையில் வைத்துப் போற்றப்பெறும். அரசனுடைய படைக்கலங்களை வைத்தற்குத் தனியாக ஒரு கட்டில் உண்டு. அது படைக்கலக் கட்டில் எனப்பெறும். ஆயுதங்கட்கெல்லாம் நெய்பூசிப் பீலியணிந்து மாலை சூட்டுவது வழக்கம். 1. அரசனோடிருக்கும்போதும், செல்லும்போதும், இடக்கையில் இருப்பதற்கும் செல்வதற்கும் இன்னின்ன குலத்தாரென்றும், வலக்கையில் இருப்பதற்கும் செல்வதற்கும், இன்னின்ன குலத்தாரென்றும், குடிகள் இருவேறு பிரிக்கப்பட்டிருந்த தாகவும்; இடக்கைக் குலத்தார் இடங்கை யென்றும் வலக்கைக் குலத்தார் வலங்கை யென்றும், பெயர்பெற்றதாகவும் கூறுவர். |