பக்கம் எண் :

பழந்தமிழாட்சி75

அளக்கப்பட்டன என்பது,1 "ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிக் கீழ் நான்குமாவினால் இறை கட்டின காணிக்கடன்" என்பதனால் விளங்கும். இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428, 1/800,000 வேலி.


இனி, காலவளவை வருமாறு:

60 நொடி

1 விநாடி

60 விநாடி

1 நாழிகை

1/2நாழிகை

1 சாமம்

8 சாமம்

1 நாள்

7 நாள்

1 வாரம்

15 நாள்

1 பக்கம்

2 பக்கம்

1 மாதம்

6 மாதம்

1 அயனம்

2 அயனம்

1 ஆண்டு