பக்கம் எண் :

80பழந்தமிழாட்சி

நற்காசுகளையும் கலப்புக் காசுகளையும் உரைத்துக் காண்பதற்கு ஆங்காங்குக் கட்டளைக்கல் என்னும் உரைகல்லும், தண்டவாணி என்னும் உரையாணியும் இருந்தன.


     காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன்றா தென்பதற்கறி குறியாக, அதிகாரிகளால் துளையிடப்பட்ட துளைப்பொன் என்பதும், அக்காலத்து வழங்கிற்று.2 தூய வெள்ளிக்காசும் துளை யிடப்பட்டதாகத் தெரிகின்றது.


     முதற்காலத்தில் அகமதிப்பும் புறமதிப்பும் ஒத்திருந்த நாண யங்கள் சில பிற்காலத்தில் நிறை குறைந்தும் தாழ்ந்த தாது கலந்தும் குறிநாணயம் (
Token coins ) ஆயின.


     சங்ககாலத்திற்குப் பிற்பட்ட காசுகளில், அரசர் குல முத்திரை யோடு அவ்வவ் வரசர் சிறப்புப் பெயரும் வழிபடு தெய்வக்குறியும் பிற வடிவங்களும் பொறிக்கப்பட்டன. அவை அவற்றை அடிப்பித்த அரசர் பெயரால் மதுராந்தகன் மாடை வீரபாண்டியன் காசு என வழங்கின. முத்திரை மட்டுமுள்ள பழங்காசுகள் பழம்பாண் டியன் காசு, பழஞ்சோழன் காசு எனப்பட்டன. பேரரசர் காசுகளில் அவரால் வெல்லப்பட்ட அரசர் முத்திரைகளும் உடன்பொறிக்கப் பட்டன. சில காசுகள் இருபுறமும் ஒரே வகையாகவும், சில வேறு வகையாகவும் குறிகள் கொண்டிருந்தன. காசடிப்பதற்குத் தனிவரி வாங்கப்பட்டது. அது அடிகாசு பொன்வரி மாடைக்கூலி முதலிய பெயர்களாற் குறிக்கப்பட்டது.


     மூவேந்தர் காசுகளும், முதலாவது சதுரமாகவும் நீள் சதுர மாகவுமிருந்து பின்னர் வட்டவடிவு பெற்றனவென்று, நாணய வாராய்ச்சியாளர் கூறுவர்.


     பிறவரசர் காசுகள்: கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து, வணிகத் தொடர்பாகவும் அரசியல் தொடர்பாகவும் பிறவரசர் காசுகளும் தமிழ்நாட்டில் வழங்கி வந்தன.

     பலகால ரோமக்காசுகள் - சிறப்பாக 4ஆம் 5ஆம் நூற்றாண் டிற்குரியவை-தமிழ்நாட்டிற் பலவிடங்களிலும், அவற்றுள்ளும் சிறப்பாக மதுரையைச் சுற்றியும், மூவுலோகத்திலும் பெருவாரி யாய்க் கிடைத்திருக்கின்றன. முதற் பாண்டியப் பேரரசுகாலத்தில் 



2. பல கழஞ்சு மதிப்புள்ள ‘ஊர்க்கற் செம்மைப்பொன்’. ‘துளை நிறைப்பொன்’ என இருவகைப்பொன் வழங்கியதாகத் தேசிகாச்சாரியார் தம்
South Indian Coins என்னும் நூலிற் கூறுவர். (p. 151)