பல்வேறு கொடை நிகழ்த்தி வந்தனர். அவை உண்டிக்கொடை, பொற்கொடை, ஊர்திக்கொடை, விலங்குக் கொடை, சின்னக் கொடை, பெயர்க்கொடை, நிலக்கொடை, மகற்கொடை, ஆட்சிக் கொடை என ஒன்பான் வகைப்படும். பார்ப்பனர்க்கு நாள்தோறும் உணவளிக்கும்படி, ஆங்காங்குக் கோயில்களிலும் மடங்களிலும் ஊட்டுப்புரைகளிலும் நிதியும் மானியமும் விட்டிருந்தது, உண்டிக் கொடை யாகும். பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதன் பாரதப் போர்ப் படைகளிரண்டிற்கும் பதினெட்டு நாளும் பெருஞ்சோறு வழங்கியதும், உண்டிக்கொடை யின் பாற்படும். புலவர்க்களித்த பல்லாயிரக்கணக்கான பொற்காசும், பாணர்க்களித்த பொற்றாமரைப்பூவும், பாடினியர்க்கும் விறலியர்க் கும் அளித்த பொன்னரிமாலையும், ஆடல் பாடல் அரங்கேறிய பாணர்க்கும் கணிகையர்க்கும் அளித்த ஆயிரத் தெண்கழஞ்சு பொன்னும்,1 வெற்றி விழாத் தொடர்பாக மறையோர்க்களித்த துலாபாரம்2 என்னும் ஆள்நிறைப் பொன்னும் இரணியகருப்பம் என்னும் பொற்குடமும் பொற்கொடை யாகும். புலவர் பாணர் கூத்தர் முதலியோர்க்களித்த குதிரை யானை தேர் என்பவை ஊர்திக்கொடை யாகும். மறையோர்க்கவ்வப்போதளித்த ஆவாயிரம் (கோசகஸ்ரம்) விலங்குக்கொடை யாகும். அவைக்களத் தலைமைப் புலவர்க்களித்த குடை கொடி சிவிகை முதலிய விருதுகளும், ஆடல்பாடல் அரங்கேறியவர்க் களித்த தலைக்கோலும், வணிகத் தலைவர்க் களித்த எட்டிப் பூவும், படைத்தலைவர்க்களித்த ஏனாதி மோதிரமும், அமைச்சர்க் களித்த காவிதிப்பூவும் சின்னக்கொடை யாகும். உழுவித்துண்ணும் வேளாளர்க்களித்த வேள் அரசு என்னும் பட்டங்களும், வணிகர் தலைவர்க்களித்த எட்டிப் பட்டமும், ஆடல்பாடல் அரங்கேறியவர்க் களித்த தலைக்கோற்பட்டமும், அமைச்சர்க்களித்த காவிதிப் பட்டமும், படைத்தலைவர்க்களித்த ஏனாதிப்பட்டமும், பலவகை அரசியலதிகாரிகட்களித்த அரையன் (ராயன்) மாவரையன் (மாராயன்) பேரரையன் விழுப்பேரரையன் 1 ."முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்தவா யிரம்பொன் பெறுப" (சிலப். ப. 121) என்பது அடியார்க்கு நல்லாருரை மேற்கோள். 2. சேரன் செங்குட்டுவன் மாடல மறையோனுக்களித்த துலாபாரம் 50 துலாம் (375 பவுண்டு) பொன்னாகும். |