பக்கம் எண் :

102பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

(பெருஞ்சாலை) வாரியம், பஞ்சவார வாரியம், ஆட்டை வாரியம் முதலியனவாகும். ஊரவை நடவடிக்கைகளையும் கணக்கையும் எழுதி வைக்க ஊர்க்கணக்கன் என்னும் அலுவலன் இருந்தான்.

   பஞ்சவார வாரியம் வரித்தண்டலைக் கவனிப்பதென்றும், பிற வாராயங்களை மேற்பார்ப்பதென்றும், பலவாறாகக் கூறுவர். அது இயற்கையாகவோ செயற்கையாகவோ உண்டாகும் உணவுப் பஞ்சத்தைத் தடுக்க ஏற்பட்டதாகவும் இருக்கலாம். வழக்குத்தீர்த்து முறைசெய்தல் ஆட்டை வாரியத்தின் கடமையாகும். உரிமை
(Civil) வழக்கு, குற்ற (Criminal) வழக்கு ஆகிய இரண்டையும் கேட்டு, கொலைத்தண்டம் செய்யவும் அவ் வாரியத்திற்கு அதிகாரமிருந்தது. மன்றுபாடு, தண்டா, குற்றம் எனத் தண்டனை மூவகைப்பட்டிருந்தது.

அமை-அவை. ஒ.நோ: அம்மை-அவ்வை, குமி - குவி.
அமைதல் = நெருங்குதல், பொருந்துதல், கூடுதல். அமை = கூட்டம் (முதனிலைத் தொழிலாகு பெயர்.) ஒ.நோ: இமை - குமை.(வ.).

   ஒவ்வொரு கூற்றத்தையும் கவனிக்க நாடாள்வான் என்ற அதிகாரியும், ஒவ்வொரு கோட்டத்தையும் மேற்பார்க்க நாடு கண்காட்சி என்ற அதிகாரியும் இருந்தனர்.

"ஊரமை செய்யும் வாரியப் பெருமக்களோம்" (S.I.I.I, 117).
அவை - சவை - சபா(வ.). ஒ.நோ: வடவை - வடவா(வ.) -படபா(வ.).

   அரசன் தலைநகரிலிருந்து ஆண்டு வந்தான். அரசனுக்குக் காவல்தொழிலே சிறப்பாதலாலும், காவலன், புரவலன் என்னும் பெயருண்மையாலும், அரசு என்பது அரண் என்னும் சொல்லிற்கு இனமாய், பாதுகாப்பு அல்லது காவல் என்னும் கருத்தை அடிப் படையாய்க் கொண்டதாகக் தெரிகின்றது. அரசு-அரசன்.

Gk. archon, L.rex, regis, skt. rajan
அரசன் - அரைசன் - அரையன் - ராயன் (கொச்சை)- ராயலு(தெ.)
E. roy, king, as in Viceroy.
ME. royal (adj.) f. OF. roial.

   அரசர் குறுநில மன்னரும் பெருநில மன்னரும் என இரு திறத்தார். சிலவூர்த் தலைவரான கிழவரும் பலவூர்த் தலைவரான வேளிரும் பொருநரும் குறுநில மன்னர் பெருநாட்டுத் தலைவரான சேர சோழ பாண்டியர் மூவரும் பெருநில மன்னர். அவர் முடி சூடியதால் வேந்தர் எனப்பட்டார். குறுநில மன்னர் அவருக்கடங்கிய சிற்றரசர்.