உள. ஆஸனம் என்னும் சொல்லே தென்சொல்லின் திரிபென்பது, என் வடமொழி வரலா ற்றில் விளக்கப் பெறும். (14) மாயம் (Conjury) இது மாலம் அல்லது கண்கட்டு. (15) வசியம் (Enchantment) இது மகளிரையும் பிறரையும் மருந்தாலும் மந்திரத்தாலும் மனப் பயிற்சியாலும் வயப்படுத்தல். வயின் - வயம் - வசம் - வசி - வசியம். (16) மந்திரக் கட்டு இது தீ காற்று முதலிய இயற்கைப் பூதங்களையும், புலி நாய் பாம்பு முதலிய உயிரிகளையும் மாந்தரையும், இயங்காதவாறும் தீங்கு செய்யாதவாறும் மந்திரத்தால் தடுத்தல். "கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்" (தாயு.தேசோ.8) (17) மகிடி (மோடி) இது மந்திரத்தாற் பொருள்களை மறைத்தலும் அவற்றை எடுத்தலுமாகும். (18) பேயோட்டல் (Exorcism) பல்வகைப் பேய்களையும் கோடங்கி அல்லது உடுக்கடித்து, பேய் கோட்பட்டாரினின்று ஓட்டுதல் பேயோட்டல் ஆகும். ( 19) குறளி இது குட்டிப் பேயால் சிறு குறும்புகள் செய்வித்தல். (20) செய்வினை (Sorcery or Witchcraft) இது பேயை ஆளும் மந்திரக்காரனைக் கொண்டு, வேண்டாதவர்க்கு நோயும் சாக்காடும் வருவித்தல். இது சூனியம் என்றும் உலக வழக்கில் வழங்கும். சுல் - சுன் - சுன்னம் - சூன்ய (வ.) (21) கரவட நூல் இது களவு நூல். "மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவியென் |