| தொன்றுதொட்டுக் கணியத்தொழில் செய்து வரும் தமிழ் வகுப்பான் வள்ளுவன். வள் கூர்மை. வள்ளுவன் கூர்மதியன். ஆரியக் குலப் பிரிவால், அவன் தாழ்த்தப்பட்டுப் பேரிடங்களிற் பெரும் பாலும் பிழைப்பிழந்தான். கண்ணுதல் = அகக்கண்ணாற் பார்த்தல், கருதுதல், மதித்தல். கண்ணியம் மதிப்பு. கண் - கணி. கணித்தல் = மதித்தல், கணக்கிடுதல், அளவிடுதல். கணி - கணிதம் - கணிசம் = மதிப்பு (aprroximation). கணி - கணிகை = தாளம் கணித்தாடுபவள். கணி - கணிகன். கணியன் = நாள்கோள் நிலைகண்டு வருங்கால நன்மை தீமை கணிப்பவன். கண், கணி, கணிதம், கணிகை என்னும் தென்சொற்கள், வடமொழியில் முதலெழுத் தெடுப்போசையுடன் வழங்குகின்றன. கணிதம் என்பது கணித என்றும், கணிகை என்பது கணிகா என்றும், ஈறு குன்றியும் திரிந்தும் வழங்கும். (11) கணக்கு கள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல், கூடுதல். கள்ள = ஒக்க (உவம உருபு). கள் - களம் = கூடுமிடம். கள் - கள - கண. கணத்தல் = பொருந்துதல், கூடுதல், ஒத்தல். கணக்க = போல. குரங்கு கணக்க ஓடுகிறான் என்னும் வழக்கை நோக்குக. கண - கணம் = கூட்டம். கணவன் கூடுகின்றவன். கண - கணக்கு = கூடிய தொகை, அளவு கணக்கு என்பது முதலில் கூட்டல் கணக்கைமட்டும் குறித்து, பின்பு நால்வகைக் கணக்கிற்கும் பொதுப்பெயராயிற்று. பண்டைத் தமிழர் கணக்கில் மிகத் தேர்ந்தவர் என்பது, அவர் கையாண்ட நுண்ணிய அளவைகளால் அறியப்படும். எண்ணலளவை கீழ்வாய்ச் சிற்றிலக்க வாய்பாடு 6.5 தேர்த்துகள் 100 நுண்மணல் 60 வெள்ளம் 40 குரல்வளைப் பிடி 20 கதிர்முனை 14 சிந்தை 17 நாகவிந்தம் 7 விந்தம் 6 பாகம் | = 1 நுண்மணல் = 1 வெள்ளம் = 1 குரல்வளைப் பிடி = 1 கதிர்முனை = 1 சிந்தை = 1 நாகவிந்தம் = 1 விந்தம் = 1 பாகம் = 1 பந்தம் | |