எழுத்தியல் - Orthography 1. சில எழுத்துகளின் வடிவங்கள் - Forms of the Tamil Letters இவ் வடிவங்கட்கு மாறா யெழுதுவதெல்லாம் வழுவாகும். 2. சில இனவெழுத்துகளின் பெயர்கள் | எழுத்து | பெயர் | i | ண | டண்ணகரம், முச்சுழி ணகரம். | | ந | தந்நகரம், மொழிமுதல் நகரம் | | ன | றன்னகரம், இருசுழி னகரம் | ii | ர | இடையின ரகரம், சின்ன ரகரம் | | ற | வல்லின றகரம், பெரிய றகரம் | iii | ழ | சிறப்பு ழகரம், பெரிய ழகரம், மகர ழகரம் | | ள | பொது ளகரம், சின்ன ளகரம | இவ் வினவெழுத்துகளை விதந்து கூறற்கு வெவ்வேறு அடைகள் ( epithets) இருப்பினும், இவற்றின் ஒலிகள்மட்டும் எவ்விதத்தும் மாறாவென்பதை மாணவர் திட்டமா யறியக் கடவர். பெரிய ரகரம், பெரிய ளகரம் என்று கூறுவது வழுவாகும். |