சோளம் = ஒரு தானியம் | சோழம் = ஒரு நாடு | நாளி = மூங்கில், நாய் | நாழி = படி, நாழிகை | நுளை = செம்படவர் குலம். | நுழை = புகு, நுணுகு | பளிச்சு = ஒளிவீச்சுக் குறிப்பு | பழிச்சு = புகழ், வாழ்த்து, துதி | பளு = கனம் | பழு = ஏ. முதிர், கனி, மஞ்சள் நிறமாகு,பெ. ஒரு நிறம் (பழுக்காவி) | பாளி = ஒரு மொழி | பாழி = சிறுகுளம், நகர் | பாளை = மடல் | பாழை = மொழி | பாள் = கம்பி | பாழ் = வீண், அழிவு, வெறுமை | பிளா = ஆட்டொலி | பிழா = இறைகூடை, ஓலைத்தட்டு | பீளை = கண்மலம் | பீழை = துன்பம் | புளுகு = பொய் | புழுகு = புனுகு | பூளை = ஒரு செடி | பூழை = துவாரம், சிறுவாசல் | பொளி = ஏ. கொத்து பெ. வரப்பு | பொழி = ஊற்று, விரைந்து பேசு நிரம்பக்கொடு, திரட்டு | முளவு = முள்ளம்பன்றி | முழவு = மத்தளம் | முளை = ஏ. தோன்று. பெ. விதைமுளை, கட்டுத்தறி, மூலம் | முழை = குகை | மூளை = brain , எலும்புள்ளீடு | மூழை = அகப்பை | மூள் = மிகு | மூழ் = மூடு | வளி = காற்று | வழி = ஏ. நிரம்பிவிழு. பெ. பாதை | வளை = ஏ. கோணலாகு, வட்டமாகு, சூழ்,முறறுகையிடு.பெ.துவாரம் முகட்டு விட்டம் | வழை = சுரபுன்னை மரம் | வாளி = அம்பு, வளையம், கடகால் | வாழி = வாழ்க | வாளை = ஒரு மீன் | வாழை = ஒரு மரம் | வாள் = ஒளி, ஓர் ஆயுதம் | வாழ் = உயிரோடிரு,மேனமையாயிரு | விளவு = விளாமரம் | விழவு = திருவிழா, கொண்டாட்டம் | விளா = ஒரு மரம் | விழா = திருவிழா, கொண்டாட்டம் | விளி=ஏ.கூப்பிடு,முடி,.இற.பெ.கூப்பிடுதல் | விழி = ஏ. கண்திற, பார். | விளை = ஏ. வளர், முதிர். பெ. வயல் | விழை = விரும்பு | வேளம் = பகையரச மகளிர் சிறைக்களம் | வேழம் = கரும்பு, மூங்கில், யானை | சில சொற்கள் ளகர ழகர பேதமின்றி எழுதப்படும். அவையாவன: இளிவு இழிவு = நிந்தை உளறு உழறு = பிதற்று, நாத்தடுமாறு |