பாசி; பிடர், பிடரி; புட்டி, புட்டில்; புலை, புலால், புலவு; புழுகு, புனுகு; புறா, புறவு, புறவம்; பூனை, பூசை; பெடை, பெட்டை, பேடு; பெட்டி, பெட்டகம்; பெண், பெண்டு; பொத்தகம், புத்தகம்; மகாமகம், மாமாங்கம்; மகிழ்நன், மகிணன்; மங்கலியம், மாங்கலியம்; மடம், மடமை; மதி, மதியம்; மத்திமம், மத்திபம் (வ.); மத்தியானம், மதியம்; மனம், மனது, மனசு; மனிதன், மனுடன் (வ.); மன்று, மன்றம்; மார், மார்பு, மருமம்; மாதம், மாசம்; முத்து, முத்தம்; முழவு, முழா; முழுது, முழுவது, முழுவன்; முன்றில், முற்றம்: ரூபா, ரூபாய்; வலி, வலிமை, வல்லபம்; வழமை, வழக்கம்; வளை, வளைவி, வளையல்; வாணிகம், வாணிபம், வணிகம்; வாய்பாடு, வாய்ப்பாடு; (விஷ்ணு) விட்டுணு, விண்டு; விட்டி, விட்டில்; வித்து, விதை; விழா, விழவு;விளா,விளவு, வெள்ளில்; வெள்ளை, வெளுப்பு, வெண்மை; வேடன், வேடுவன், வேட்டுவன்; வேட்டம், வேட்டை; வேண்டாம், வேண்டா. தொழிற்பெயர்கள் விகுதி மாறும்போது வேறு வடிவாகத் தோன்றும். சில விகுதிகட்குப் பொருள்மாறும்; சில விகுதிகட்குப் பொருள் மாறா. உ-ம்: வினைப்பகுதி | தொழிற்பெயர்கள் | i. கொள் | கொள்ளல், கொள்கை, | ii. வஞ்சி | வஞ்சம்,வஞ்சனை, வஞ்சகம் | பன்முறைச் சொற்கள் - Alternative forms of Words and Phrases பெயர்ச்சொல் முன்கை, முன்னங்கை; வருவாய், வருமானம் வேற்றுமை 4ஆம்.வே. அவற்கு, அவனுக்கு (ஒருமை) அவர்க்கு, அவருக்கு பன்மை அல்லது அவர்கட்கு, அவர்களுக்கு } உயர்வுப் பன்மை வினைப்பகுதி, வினைமுற்று, வினையடிப்பெயர் ஆ, ஆகு; ஆயிற்று, ஆயினது; உடையது, உடைத்து; ஏற்கா, ஏலா; சிறியது, சிறிது; நகு, நகை; நக்கான், நகைத்தான்; நினைந்தான், நினைத்தான்; நினைவு, நினைப்பு (ஞாபகம்); போ, போகு, போது; போகடு, போடு; போனான், போயினான், போந்தான், போகினான்; விடுத்தான், விட்டான். பல வினைகளின் புடைபெயர்ச்சி ( conjugation ) ஒன்றுபோலிருப்பதால், இங்குக் கூறியவற்றுட் சிலவற்றை வாய்பாடுகளாகவே கொள்க. பின் வருவனவற்றிற்கும் ஈதொக்கும். |