பக்கம் எண் :

50கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

சம்பளத்திலிருந்து கொஞ்சங்கொஞ்சமாய்க் கொடுத்துத் தீர்ப்பேன்" என்று செலவாளி சொன்னான்.
2. கொடும்புணர் நடை

    உ-ம்: "நான்றென்காட்டின் மேய்ந்து கொண்டிருக்கையிற் கேளுங்க ளொரு கிழப்புலி பலவீனத்தாலாகாரஞ் சம்பாதிக்கக் கூடாமலோரேரிக் கரையினீராடிக் கையிற்றர்ப்பை வைத்துக் கொண்டுட்கார்ந்திருந்தது."
                                        - பஞ்சதந்திரம்

3. மணிப்பவளநடை

   i. தற்சம மணிப்பவளம்
   உ-ம்: மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரஸாதத்தாலே, க்ரமாகதமாய் வந்த அர்த்தவிசேஷங்களைப் பின்புள்ளாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி, ப்ரபந்தரூபேண உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஜ்ஞை பண்ணியருளுகிறார்.
                                      - உபதேசரத்நமாலை

  ii. தற்பவ மணிப்பவளம
   உ-ம்: "பிரகிருதி மாயையினின்றுஞ் சிருட்டிமுறைபற்றிக் குணதத்துவ முதல் வைத்தெண்ணப்படும் போக்கிய தத்துவ மிருபத்துநாலுந் தோன்றும். இங்ஙனஞ் சடரூபமான விந்து மோகினி மான் மூன்றுந் தத்தங் காரியங்களைச் சிவசத்தி சங்கற்பரூப சந்நிதியினின்றுந் தோற்றுவிக்கும்"
                                    - சிவஞான சித்திஉரை

4. செந்தமிழ் நடை

   உ-ம்: "கபிலரகவல் எளிய தமிழ்நடையில் இயற்றப்பட்டிருத்தல் கொண்டும், கபிலர்க்குப் பூணூல் இட ஒருப்படாத பார்ப்பனக் குழுவினர்க்கு அறிவு தெருட்டல் வேண்டிச் சிறுபிள்ளையாயிருந்த கபிலர் இதனைச் செய்தார் என வழங்குங் கதை நம்பத்தகாததா யிருத்தல் கொண்டும், இது கபிலராற் செய்யப்பட்ட தன்றென்றும், இஃதொரு "கட்டுநூல்" என்றுங் கூறினாருமுளர். இக் கபிலரகவல் இயற்றப்பட்டதற்குக் காரணங் கூறுங் கதை நம்பத்தகாததுபற்றி இந் நூலையே கட்டுநூலென்றல் ஆராய்ச்சி யுணர்வில்லாதார் கூற்றாகும்"     - ஆசிரியர் மறைமறையடிகள்

5. கொடுந்தமிழ்நடை - திசைச்சொல் நிரம்பி வருவது

    உ-ம்: நேற்று நீன் இருந்த இலக்கிலே ஓர் இளவட்டம் நின்று கொண்டிருந்தான்.

6. கொச்சை நடை -
Barbarism

    உ-ம்: அவங்க வூட்டுக்குப் போகச்சே நல்லா விடுஞ்சு போச்சு.

7. செய்யுள் நடை அல்லது எதுகை நடை

   உ-ம்: "அவளும் உடன்பிறந்து, உடன் வளர்ந்து, நீர் உடனாடிச்
      சீர் உடன் பெருகி, ஓல் உடனாட்டப் பால் உடனுண்டு, பல்உடனெ