பக்கம் எண் :

58கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

     தற்கூற்று வாக்கியம் எழுவாயோடு தொடங்கி என்றான் என்று முடிவது இயல்பு. கூற்றுக்கு முன் சொன்னான் என்னுஞ் சொல்லை நிறுத்தி ‘முன் முடிபு‘ வாக்கியமாகக் கூறின், என்று என்னும் சொல் இறுதியில் நிற்றல் வேண்டும்.

     தற்கூற்று சொன்னதாவது என்னுந் தொடர்க்குப் பின் வரின் என்பது என்னுஞ் சொல்லால் முடிதல்வேண்டும். தற்கூற்றில் மேற்கோட்குறி யிருப்பினும் இராவிடினும், என்று அல்லது என்பது என்னும் இணைப்புச் சொல் இன்றியமையாததாகும். இராமன் சொன்னான், "நான் வருவேன்" என்று ஆங்கிலத்திற் போலெழுதல் வழுவாகும்.

     இராமன் சொன்னதாவது "நான் வருவேன்," என்பது, என்னும் முடிபினும், இராமன் "நான் வருவேன்" என்று சொன்னான், என்னும் முடிபே இயல்பும் இனிதுமாகும்.

     ஓர் உரையாட்டிலுள்ள கூற்றுகளை முடிபுச் சொற்களின்றி மாறி மாறி யெழுதுவது நூனடையே யன்றி மாணவர் வியாசநடையன்று.


9. மரபு -
Idiom


     பொருள்கட்குச் சான்றோர் தொன்றுதொட்டு வழங்கி வரும் சொற்களையே வழங்குதல் மரபாகும். மரபு தவறின் வழுவாம்.

     பிழை               திருத்தம்
     கம்பவைக்கோல்    கம்பந்தட்டை
     நண்டுக்குட்டி        நண்டுக்குஞ்சி

10. இணைமொழிகள் - Words in Pairs


     பெருவழக்கானவும் வழக்கற்றனவுமான இணைமொழிகள் இங்குக் கூறப்பட்டில.

     அகட விகடம், அக்குத் தொக்கு, அந்தியும் சந்தியும், அருமை பெருமை, அருவுரு, அல்லும் பகலும், அழுகையுங் கண்ணீரும், அறம் மறம், ஆடல் பாடல், ஆடை அணி, ஆண்டான் அடிமை, ஆதியந்தம், ஆய்ந்து ஓய்ந்து, இண்டு இடுக்கு, இயங்குதிணை நிலைத்திணை, இயலும் செயலும், இளைத்துக் களைத்து, ஈகையிரக்கம், ஈடும் எடுப்பும், உடை நடை, உண்டு உடுத்து, உருட்டும் புரட்டும், உருண்டு திரண்டு, உருவும் திருவும், உள்ளது உரியது, உற்றார் உறவினர், ஏடாகோடம், ஒட்டி உலர்ந்து, ஒப்பு உயர்வு,

     கங்கு கரை, கட்ட நட்டம், கட்ட நிட்டூரம், கண்டது கேட்டது, கண்ட துண்டம், கண்ணீரும் கம்பலையும், கரடு முரடு, கல்லும் கரம்பும், கல்வி கேள்வி, கள்ளம் கவடு, கனவோ நனவோ, குணம் குறி, குலமுங் குணமும், குறுக்கும் மறுக்கும், குறுக்கும் நெடுக்கும், குற்ற நற்றம், கேளுங் கிளையும், கொடி கோத்திரம், கொத்தடிமை குலவடிமை, கொள்வனை கொடுப்பனை, கோள் குண்டுணி,