பக்கம் எண் :

எழுத்தியல்71

      செய்யுள், வசனம் - எது சிறந்தது?
      ஜாதகக்கணிப்பு - மெய்யா? பொய்யா?
      தனி வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை - எது சிறந்தது?
      திருமணத்தில் பெருஞ் செலவு - நல்லதா? தீயதா?
      நாட்டுக்கு நன்மை விளைப்பவன் - சிக்கனக் காரனா? செலவாளியா?
      நாட்டு வாழ்க்கை, நகர வாழ்க்கை - எது சிறந்தது?
      பத்திரிகை, சொற்பொழிவு - எது வலியுள்ளது?
      புலவன், போர்வீரன், அமைச்சன் - எவன் சிறந்தவன்?
      பெண்டிர் சமத்துவம் - தகுமா? தகாதா?
      மறுபிறப்பு - உண்டா? இன்றா?
      மரவுணவு, ஊனுணவு - எது சிறந்தது?
      மேலை நாகரிகத்தால் நன்மையா? தீமையா?
      மேனாடு, கீழ்நாடு - எது சிறந்தது?
      மேனாட்டிசை, கீழ்நாட்டிசை - எது சிறந்தது?
      மேனாட்டுடை, கீழ்நாட்டுடை - எது சிறந்தது?
      மேனாட்டு விளையாட்டு, கீழ்நாட்டு விளையாட்டு - எது சிறந்தது?
      விடுதிப்பள்ளி (
Boarding school ) வாழ்க்கை - நல்லதா? தீயதா?

19. பல்வகைப் பொருள்கள்:

     அருள், அற்ப அறிவு அல்லற்கிடம், அற்பம் அற்பமன்று, அன்பு, ஆசிரிய வணக்கம், ஆராயாமற் செய்தல், ஆலயப்பிரவேசம், இந்திரவிழா, இற்றைக்கல்வி யிருக்கவேண்டிய முறை, உடற்பயிற்சி, உணவுபற்றிக் கவனிக்கவேண்டியவை, ஒலிம்பிய விளையாட்டு, விரிவளர்ச்சி (
Evolution ), உருவுகண்டெள்ளாமை, உலக ஒற்றுமையை வளர்க்கும் விதம், உலகப் புதுமைகள், உலகம் ஒரு கூட்டுறவுச் சங்கம், உழைப்பின் சிறப்பு, எய்ப்பில் வைப்பு ( Provision for the Future ),எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது, ஒருவர் துன்பம் மற்றொருவர்க் கின்பம், ஒழுக்கம், ஒற்றுமை உரம், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல்,

     கடன்படல், கல்வி, கள்ளுண்ணாமை, கற்றோர் கடமை, கற்பு, காலத்தின் அருமை, காலத்தின் மாறுதல், காலந்தவறாமை, குமரிநாடு, (
Lemuria ),கூர்நுதிக் கோபுரம் ( Pyramids ), கெடுவான் கேடு நினைப்பான், சகுனம் பார்த்தல், சர்வதேச சங்கம், செந்தமிழ்ச் சிறப்பு,

     தட்பவெப்பநிலையாற் குணம் வேறுபடல், தமிழிலக்கணத்தின் தத்துவ அமைதி, தமிழிலக்கியம், தமிழின் தொன்மை, தமிழை வளர்க்கு முறை, தமிழ் நாட்டிற் சங்கால சமுதாய நிலை, தனக்குழைப்பவன் பிறர்க்கும் உழைக்கிறான்,