இனி 'உறங்கினான்', 'போனான்' முதலியன எங்ஙனம் புணர்ந்தன
வெனின் அவையும் மேற்கூறியவாறு எச்சமும் ஈறுமாகவே யென்றறிக.
எ-கா: |
உறங்கி + ஆன்= உறங்கியான்- உறங்கினான். |
|
போயி
+ ஆன்= போயியான்-
போயினான். |
|
போயி
+ போய்= ஆன் - போயான் -
போனான். |
சொல்லாக்கத்தில் யகரம்
நகரமாக (அல்லது னகரமாக)த் திரிதல் இயல்பு.
எ-கா: |
யான் - நான்,
யாம் - நாம். |
சேரநாட்டுத் தமிழின்
திரிபான மலையாளத்தில், ஆயி, போயி என்னும் இறந்தகால வினை வடிவுகளே இன்றும்
வழங்குகின்றன.
(3) நிகழ்கால
இடைநிலை
நன்னூலார் கூறிய நிகழ்கால
யிடைநிலை மூன்றனுள், ஆநின்று என்பது சரியன்று. அது செய்யா என்னும் வாய்பாட்டு
இறந்தகால வினை யெச்சமும் அதனைத் தொடர்ந்த இறந்தகால வினைமுற்றுமாகிய செய்யா
நின்றான் என்னும் தொடரின் இடைநின்று தவறாய்ப் பிரித்துக்கொண்ட ஒரு சொற்பகுதியே.
ஆநின்று என்பதும் ஓர் இடைநிலையே யெனக் கொள்ளின், உண்ணாகிடந்தான் என்னும்
வழக்கினின்று ஆகிடந்தான் என்பதும் ஓர் இடைநிலையெனக் கோடல் வேண்டும்.
இனி, உண்ணாகிடந்தான் என்பது
எச்சமும் முற்றுமாக இரு சொல் லாயின் உண்ணாக்கிடந்தான் என்றிருத்தல் வேண்டுமாதலின்
உண்ணா கிடந்தான் என இயல்பாய் நிற்கும் சொல் உண்ணாநின்றான் என்பது போல் ஒருவகை
நிகழ்கால வினைமுற்றே யெனின், அது ஆகிடந்து என ஓர் இடைநிலை வேண்டுவார்
இடைக்காலத்துத் திரித்துக் கொண்ட வழக்கே யன்றித் தொன்றுதொட்டு வந்த மரபன்று
எனக் கூறி விடுக்க. செய்யா என்னும் வாய்பாட்டு எவ்வினைச் சொல்லும் நின்றான்
என்பதனொடு என்றும் இயல்பாகவே புணருமாதலின், அதனோ டொப்ப உண்ணாக் கிடந்தான்
என்றிருக்க வேண்டுவதையும் உண்ணா கிடந்தான் என இயல்பாக்கிக் கொண்டனர்
என்க.
செய்யா என்னும் வாய்பாட்டு
வினையெச்சம், செய்யாநின்றான் செய்யாநிற்கின்றான், செய்யாநிற்பான் என முக்கால
முற்றொடும் கூடிவருதலின், அவற்றுள் இறந்த கால முற்றொடு கூடியதை மட்டும் ஒரு சொல்லாகக்
கொள்வது பொருந்தா தென்க.
இனி, செய்யாநின்றான் என்பது
செய்கின்றான் என நிகழ்காலப் பொருளன்றோ தருகின்றதெனின், அது ஒரு சாரார் ஆட்சி
பற்றியதே யன்றிச் சொல்வகை பற்றியதன்றெனக் கூறி
மறுக்க. |