|
உள்
- உல் = 1. தேங்கா யுரிக்கும் கூர்ங்கம்பி. 2. கழு. |
|
|
உல்
- அல் - அல்கு - அஃகு.
அஃகுதல் = கூராதல், நுண்ணிதாதல்.
அஃகு - அக்கு = முட்போன்ற முனையுள்ள காய்மணி (உருத்திராக்கம்). அக்கு - அக்கம்.
'அம்’ - பெ.பொ.பி. ஒ.நோ : முண்மணி = அக்குமணி.
அல் - அலம் = கொட்டும் தேள்(திவா.).
அல் - அலகு = கூர்மை.
அல் -அலவு - அலவன் = கூரிய கால்களையுடைய நண்டு, கடகவோரை (திவா.).
உல் - உள் - அள் = கூர்மை (திவா.).
அள் - அளி = கொட்டும் தேனீ அல்லது வண்டு.
உள் - உளி = கூரிய செதுக்குக் கருவி.
உளி - உளியம் = கூரிய உகிருள்ள கரடி.
உளி - உகிர் = கூரிய விரலுறுப்பு.
உளி - உசி - ஊசி. ஒ.நோ : இளி - இசி. |
|
|
|
குள்
- குல் - குறு - குற்று - குத்து - கொத்து - கொட்டு. |
|
|
குள்ளுதல்
= கிள்ளுதல் (நெல்லை வழக்கு).
குள் - குளவி = கொட்டும் தேனீ.
குள் - குளிர் = நண்டு (பிங்.), கடகவோரை (திவா.),
சூலம் (சூடா.). குளிர் - குளிரம் = நண்டு. |
நண்டு
கூரிய கால்களை யுடையதாயும் நிலத்தைக் கிண்டிச் செல்வதாயு மிருத்தலைக் காண்க.
|
|
குள்
- கள் = முள். கள் - கள்ளி = முட்புதர்வகை.
கள் - கடு = முள் (திவா.), முள்ளி(மலை.).
கள் - கண்டு = முள்ளுள்ள கண்டங்கத்தரி (மலை.).
கண்டு - கண்டம் = கள்ளி (மலை.), எழுத்தாணி (பிங்.),
வாள் (பிங்.), முட்கத்தரி (கண்டங்கத்தரி.)
கண்டம் - கண்டகம் = முள் (இறை.41: 172), நீர்முள்ளி (தேவா.
268:2), வாள் (சூடா.), உடைவாள் (திவா.).
கண்டகம் - கண்டகி = தாழை, மூங்கில்வகை, இலந்தை.
கண்டு - கண்டல் = தாழை (நாலடி.), முள்ளி(சூடா.), நீர்முள்ளி
(மலை.).
கண்டல் - கண்டலம் = முள்ளி (மூ.அ.).
கண்டு - கண்டி = அக்கமாலை (தேவா. 586:6). |
|