காக்கை - காக்க
காகா
- காக்கா - காக்கை. காகா - காகம்.
ஆரியம்
தோன்றுமுன்பே காக்கை என்னும் சொல்
குமரிக் கண்டத்தில் தோன்றிவிட்டது.
காஞ்சி1
- காஞ்சீ
காஞ்சி
= ஆற்றுப் பூவரசு, அம் மரம் சிறந்த பழந்தொண்டை
நாட்டுத் தலைநகர்.
காஞ்சி
- கஞ்சி - கச்சி.
காஞ்சிபுரம்
= கோபுரமுள்ள காஞ்சிநகர். புரம் என்பது பண்டைத்
தமிழகத்திற் கோபுரமுள்ள நகர்ப் பெயரீறு.
காஞ்சி2
- காஞ்சீ
காஞ்சி
= எழுகோவையுள்ள மாதர் அரைப்பட்டிகை.
"எண்கோவை
மேகலை காஞ்சி யெழுகோவை
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு
விரிசிகை யென்றுணரற் பாற்று"
|
என்பது பழைய மேற்கோள்
வெண்பா.
ஐவகை
அரைப்பட்டிப் பெயர்களுள் காஞ்சி, மேகலை, கலாபம்
என்னும் மூன்றும் வடநூலுட் புகுந்துள்ளன. அதனால் அவை
வடசொல்லென்று காட்டப்படுகின்றன. ஆயின், அங்குச் சிறப்புப்
பொருளை யிழந்து அரைப்பட்டிகை என்னும் பொதுப் பொருளே
தருகின்றன.
காண் - ஜ்ஞா (இ.
வே.)
தமிழ்
|
பழைய
ஆங்கிலம்
|
இலத்தீனம்
|
கிரேக்கம்
|
வேத
ஆரியம் |
|
|
|
|
|
கண்
|
கான்,
கன்,
கென் கொன்,
க்னோ |
க்னோ(g)
|
க்னோ(g)
|
ஜ்ஞா
|
இவ்வொரு
சொல்லே, தமிழ் எங்ஙனம் ஆரியத்திற்கு மூல மென்றும்,
வேத ஆரியம் எவ்வளவு திரிந்துள்ளதென்றும், காட்டப் போதியதாம்.
காண்டம் - காண்ட
(வே.)
கண்டு
- கண்டம் = பெருந்துண்டு, பெருநிலப் பிரிவு.
கண்டம்
- காண்டம் = நூற்பெரும் பிரிவு.
|