காளம் - கால
கல்
- கஃறு = கறுமை, கருமைக் குறிப்பு.
"கஃறென்னுங்
கல்லத ரத்தம்" |
(தொல்.
எழுத்து. 40, உரை)
|
கல்
- கால் = கருமை.
"கால்தோய்
மேனிக் கண்டகர்" |
(கம்பரா.
வானர. 21)
|
கல்
- கள் - களம். கால் - காள் - காளம் = கருமை. காள் - காழ் - காழகம்
= கருமை.
கள்
-காள் - காளம் = கருமை.
காளம்2
- காஹல
எக்களித்தல்
= கெந்தளித்தல், பெருமகிழ்ச்சி கொள்ளுதல்.
எக்களி
- எக்காளம் = கெந்தளிப்பு. கெந்தளிப்பாய் ஊதும்
கொம்பு அல்லது குழற்கருவி. எக்காளம் - காளம் - காளகம்.
காளகம் - காலக
காளம்
- காளகம் = கருமை.
"காளக
வுடையினன்" |
(சீவக. 320)
|
காளகம்
- காழகம் = கருமை.
"காழக
மூட்டப் பட்ட" |
(சீவக. 1230)
|
காளி-காலீ
கள்-காள்
- காளி = கரியவள், பேய்த்தலைவி, பாலைநிலத் தெய்வம்.
கருப்பி,
கருப்பாய், மாரி என்னும் உலக வழக்கையும் மாயோள்
என்னும் செய்யுள் வழக்கையும் நோக்குக.
மால்
- (மார்) - மாரி = கருமுகில், மழை, கரியவள் (காளி).
மரணத்தை
உண்டாக்குபவள் என்று பொருள் கூறி மாரி என்பதை
வடசொல்லாகக் காட்டுவது பொருந்தாது.
மா
= கருமை. மா-மாயோள் = கரியவள் (காளி).
பண்டைத்
தமிழகத்திற் போர் பெரும்பாலும் பாலைநிலத்தில்
நிகழ்ந்தமையால், காளி போர்த் தெய்வமும் வெற்றித் தெய்வமும்
(கொற்றவை) ஆனாள். பின்பு தாயாகக் கருதப் பெற்றதனால்
அம்மையெனப் பெயர் பெற்றாள்.
|