|
|
புள்
புள் - புள்ளி = குத்து. புள்ளுதல் என்னும் வினை, உள்ளுதல்
துள்ளுதல் என்பன போன்றே பிற்காலத்து வழக்கற்றுப் போயிற்று.
அதனின்று திரிந்த புட்டு, பொட்டு, பொட்டி என்னும் வினைகளும்
வழக் கிறந்தன. |
|
|
|
|
|
புள்
- பொள் - பொறி = புள்ளி. |
|
|
|
|
|
பொள்
- பொட்டு = புள்ளி. |
|
|
|
|
முள்
முள்ளுதல் = கிள்ளுதல். முள் - முள்ளி = முட்செடி, |
|
|
முட்கத்தரி,
தாழை. முளி = செம்முள்ளி.
முள் - முளா - முளவு = முள்ளம்பன்றி (புறம். 325), முட்கோல்.
முள் - முளரி = நுண்மை (சூடா.), முட்செடி (பிங்.),
முட்சுள்ளி (நற். 384).
முள் - முளை = கூர்மை (கலித். 4). முளை - முனை.
முள் - முண்டு - முண்டகம் = முள், முள்ளுடைத் தூறு (பிங்.), தாழை (பிங்.), நீர்முள்ளி
(திவா.), கழிமுள்ளி (மதுரைக். 96), கருக்குவாய்ச்சி. முள் - வள் = கூர்மை. |
இத்தகைய ஒழுங்குபட்ட
ஏழடிச் சொற்றிரிவு வேறெம் மொழியினுங்
காணவியலாது. தமிழினின்று திரிந்த திரவிட மொழிகளும், எத்துணை
வளர்ச்சி பெற்றிருப்பினும், இத்தகை வளமுற்றவையல்ல. இங்ஙனம் இயற்கை,
மென்மை, ஒழுங்கு, வளம் என்னுந் திறங்களை ஒருங்கே கொண்ட தமிழ்,
தொன்றுதொட்டுத் தென்னாட்டொடு இரண்டறத் தொடர்பு கொண்டிருப்பது
பெரிதுங் கவனிக்கத் தக்கது.
2.
தமிழின் திரிபு வளர்ச்சி
|
மூவிடப்பெயர்
|
தமிழ் |
|
|
|
|
தன்மை |
முன்னிலை
|
படர்க்கை
(சுட்டு) |
|
|
|
ஒருமை
: |
|
|
(ஏன்)-யான்-நான் |
(ஊன்)-நூன்-நீன்-நீ |
அவன்,அவர்,அது |
|
|
|
பன்மை
: |
|
|
(ஏம்)-யாம்-நாம் |
(ஊம்)-நூம்-நீம் |
அவர்,அவர்கள்,அவை |
|
நீயிர்-நீவிர்-நீர்
|
|
|
|
|
|