வடவர்
சு + வர்ண என்று பகுத்து நன்னிற முள்ளது என்று
பொருட் காரணங் காட்டுவர்.
இரட்டித்த
னகரத்தை ர்ண என்று திரிப்பது வடவர் மரபு.
எ-டு
: கன்னம் - கர்ண = காது.
சோடை
- சோஷ
சுடு-சூடு
- சோடு - சோடி. சோடித்தல் = காய்தல், வற்றுதல்
(சங். அக.).
சோடு
- சோடை = வறட்சி.
வடவர்
சுஷ் என்பதை மூலமாகக் காட்டுவர். அது சுள் என்பதன்
திரிபென்பது முன்னரே கூறப்பட்டது.
சோம்பு
- ஸ்வப் (இ.வே.)
சும்
= அமைதி, ஒன்றுஞ்செய்யாமை, சோம்பல்.
சும்மாயிருத்தல்
= அமைதியாயிருத்தல், வினைசெய்யா திருத்தல்.
"சிந்தையை
யடக்கியே சும்மா யிருக்கின்ற திறமரிது" (தாயு. தேசோ.)
சும் - சும்பு. சூம்பு = சோம்பல். சூம்பு - சோம்பு.
சோம்புதல்
= வினைசெய்யாதிருத்தல், சுறுசுறுப்பின்மை, கால
நீட்டித்தல், தூங்க விரும்புதல்.
ஒ.நோ
: தூங்குதல் - உறங்குதல், காலந்தாழ்த்து வினைசெய்தல்
மந்தமாதல்.
ஸ்வப்
= தூங்கு, கனவுகாண்.
L. somnus,
Slav. supati, Lith. sapnus, AS. swef, Gk. hupnos = sleep.
**********
|