எ-டு:
L.nomen, Goth., OS., OHG., namo, OE. nama, E. name,
Gk. onoma.
இம்
முறையில், நூற்றைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லும் முன்மிகை
கொண்டுள்ளது.
Hundred
என்னும் ஆங்கிலச் சொல் centum என்பதினும்
வேறுபட்டதாய்த் தோன்றினும், உண்மையில் அது பின்னொட்டுப்
பெற்ற இலத்தீன் சொற்றிரிபே.
Hund
என்பது நூற்றைக் குறிக்கும் பழைய ஆங்கிலச் சொல்.
அது எண் (number) என்று பொருள்படும் red என்னும் பின்னொட்டைக்
கொண்டுள்ளது.
Goth.
rathjo (=number) - rath - red.
ஹகரம்
ககரத்திற்கு இனமாதலால், centum என்பது hund எனத்
திரிந்தது.
நூற்றைக்
குறிக்கும் பிற ஆரிய மொழிச் சொற்களாவன:
Ir.cet,
Toch. kant, Lith. szimtas, Goth. hunda, Germ.
hundert, O.SI. suto, VL. sata, Skt. satam, Av. satam.
மேலையாரிய
மொழிகளிலெல்லாம் நூற்றுப்பெயர் இடையில்
மெல்லின மெய்கொண்டிருக்க, கீழையாரியம் வேத மொழியில் மட்டும்
அச் சொல் அது தொக்கிருப்பது, அதன் திரிபொடு பின்மையையுங்
காட்டுவதாகும். .
மேலையாரியத்தினும்
கீழையாரியம் பிந்தியதென்பது பின்னரும்
பல்வேறிடத்து விளக்கப் பெறும்.
வகரம்
சகரமாகத் திரிவது பெரும்பான்மையாவதால், வந்த
என்னும் தெலுங்குச் சொல் கெந்த அல்லது கெந்து(ம்) எனத்
திரிந்திருப்பது, உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்ததே.
வந்த
என்பது போன்றே, வேறுசில தெலுங்குச் சொற்களும் சொல்
வடிவுகளும் மேலையாரியத்துச் சென்று வழங்குவது கவனிக் கத்தக்கது.
தெலுங்கு |
மேலையாரியம் |
|
|
கிந்த
- க்ரிந்த |
Gk.
cata (down) |
|
|
பம்பு |
Gk.
pempo (to send) |
|
|
பிள்ளை
(த.) - பில்லி |
L.
feles (cat) |
|
|
மிக்கு
(த.) - மிக்கிலி |
OS.
mikil, OHG, mihhile,
ON.
mikell, Goth. mikils, E.
mickle |
|
|
மக
(த.) - மொக |
L.
mas (a male) |
|