பக்கம் எண் :

மொழியதிகாரம்91

     உத்தி = புணர்ப்பு, பொருத்தம், பொருத்தமானதை அறியும்
அகக்கரணம், நூற்கும் உரைக்கும் பொருந்தும் நெறிமுறை.

     உ - யு (இ. வே.) உத்தி என்பதில் உத் என்னும் செயற்கை யடியை
வடமொழியார் யுஜ்: (இ. வே.) என்று திரிப்பர்.

     விளையாட்டில் இவ்விருவராய்ச் சேர்ந்துவரும் சேர்க் கையைக்
குறிக்கும். உத்தி என்னும் சொல்லும் இதுவே.

     தெ.உத்தி (uddi).

     கழித்தலை அல்லது தள்ளுதலைக் குறிக்கும் உத்து என்னும்
சொல்லும் உகர அடியினதே.

     உ - உந்து. உந்துதல் = முன்தள்ளுதல், தள்ளுதல். ம. உந்து.
உந்து - உத்து.

"பொன்னெல்லா முத்தி யெறிந்து"
(கலித். 64)

     உ - யு (இ.வே.) = to keep away, ward off.

உதடு - ஒஷ்ட (இ. வே) - o™--a.

     (உதழ்) - உதடு = வாயில் முன்னிருப்பது அல்லது பொருந்து வது.
     உதழ் - இதழ்.

     வடவர் காட்டும் 'உஷ்' (உள் - ஒள்) மூலமன்று.

உந்து - உந்த் (und) - இ.வே.

     உந்துதல் - நீரெழுதல்.

"உந்துநீர்க் கங்கை" (கூர்மபு. இராமனவ. 39).

     உந்து - உந்தி = நீர் (பிங்.).

     L unda, Gk. hudor, Goth. vato, Lith. wandu, E. water, E.
     water,  OHG, wazar.

     உந்த் - உத் - உத - உதக (இ.வே.) = நீர்.

     VL. ud or und = to flow or spring, as water.

உம்பர் - உபரி (இ .வே.)

     உ - உம் - உம்பு - உம்பர் = மேல். ம. உம்பர்.

     Z. upairi, Goth, ufar, OG. obar, MG. uber, E. over. L. super,
     GK. huper.

உரம் - உரஸ் (இ. வே.)

     உர்-உறு-மிக்க. உறு-உறுதி=வலிமை . உர் - உரம்= வலிமை

     நிலத்திற்கு அல்லது பயிருக்கு வலிமை தரும் எரு, உடம்பில் வலிய
     உறுப்பான மார்பு.