பக்கம் எண் :

மொழியதிகாரம்93

"ஒருபக லெல்லா முருத்தெழுந்து"
(கலித். 39 : 23).

     உரு - உருத்திரம் = சினம்.

     OS. wreth, OE. wrath, E. wrath, wroth, OHG. reid, ON, reithr
     உலகம் - லோக (lka) - இவே.

     உல் - உலம் = உருட்சி, திரட்சி, உருண்ட கல்.

     உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல், உழலுதல்.

     உலக்கை = உருண்டு நீண்ட பெருந்தடி.

     உலண்டு = உருண்டு நீண்ட புழு.

     உலம் - உலவு. உலவுதல் = சுற்றுதல், திரிதல்.

     உலா=சுற்றி வருதல், அரசன் வலமாக நகரைச் சுற்றிவருதல்,
         அதைப் பாடிய பனுவல்.

     உலாவுதல் = சுற்றி வருதல். உலாத்துதல் = சுற்றி வருதல்.

     உலாஞ்சுதல்= தலை சுற்றுதல்.

     உலம் - உலவு - உலகு. ஒ.நோ : புறம் - புறவு - புறகு.

     உலகு = உருண்டையானது அல்லது சுற்றி வருவது.

     ஒ.நோ : கொள் - கோள். கொட்டுதல் = சுற்றி வருதல்.

     உலகு - உலகம்.

     மூவுலகம், ஈரேழுலகம், உலகமெல்லாம் என்னும் வழக்குகள்,
உலகம் என்னும் சொல்லின் பொதுமையைக் குறிக்கும். கதிரவன், திங்கள்
என்னும் இரு சுடரின் உருண்டை வடிவும் சூழ்வருகைத் தோற்றமும்
உலகங்கள் பொதுவாய் உருண்டையானவை என்றும் பெருவெளியில்
வட்டமாகச் சுற்றி வருகின்றனவென்றும், இரு கருத்துகளைத் தோற்றுவித்தன.

     வடமொழியில் லோக என்னுஞ் சொற்குப் பார்க்கப்பட்ட இடம்
என்றே பொருள் கூறுவர். அங்ஙனமே பொருட்காரணமுங் காட்டுவர்.
லோக் = பார். E. look.

     இதனால் உலகத்தைக் குறிக்கும் லோக என்னும் வடசொல்
தென்சொல்லின் திரிபென்பது தெள்ளத் தெளிவாம்.

     உலகம் என்னும் சொல்வழக்குத் தொன்றுதொட்டது.

"கால முலகம்"
(தொல். 541)

உவமை - உபமா

     உத்தல் - பொருந்துதல். உ - ஒ. ஒப்பு - ஒப்புமை.

     உ - உவ் - உவ. உவத்தல் = ஒத்தல், விரும்புதல், மகிழ்தல்.