தக்கணம் - தக்ஷண
(இ.வே.)
தக்கு
= தாழ்வு. தக்குத் தொண்டை = தாழ்ந்த குரல்.
தக்கிலே
பாடுகிறார் என்னும் வழக்கை நோக்குக.
எச்சு(உயர்வு)
X தக்கு.
வடதிசை
பனிமலையால் உயர்ந்திருத்தலால் உத்தரம் எனப் பெற்றது.
"Uttara,
northern (because the northern part of India is
high)"என்று மா. வி. அ. கூறுதல் காண்க.
தக்கு
- தக்கணம் = வடதிசையை நோக்கத் தாழ்ந்திருக்கும் தென்றிசை.
கிழக்கு
நோக்கும்போது தென்றிசை வலமும் வடதிசை இடமு
மிருப்பதால்,தக்கணம் என்னும் சொற்கு வலதிசைப் பொருளும் உத்தரம்
என்னும் சொற்கு இடதிசைப் பொருளும் தோன்றின.
வலமாகச்
சுற்றிவருதல் பிரதக்ஷிணம் என்று சொல்லப்படுதல் காண்க.
தக்கோலம் - கக்கோல
தக்கோலம்
= ஒரு நறுமணச்சரக்கு. க. தக்கோல.
தக்கோலம்
பஞ்சவாசம் என்னும் ஐம்மணங்களுள் ஒன்றாகவும் முப்பத்திருவகை ஓமாலிகைகளுள் ஒன்றாகவும்
கூறப்பெறும்.
"தக்கோலந்
தீம்பூத் தகைசா லிலவங்கங்
கப்பூரஞ்
சாதியோ டைந்து" |
(சிலப்.
5: 26,உரை)
|
"இலவங்கம்......
தக்கோலம்......... ஓமாலிகை" (சிலப்.6:77,உரை).
|