பக்கம் எண் :

106வடமொழி வரலாறு

     யெழுதுதலும் சீர் செய்தலுமாகிய புதுவருவாயையும் குறிப்பது
கவனிக்கத்தக்கது.

கப்பி-கபி (இ.வே.)

     கப்பு = கிளை. கப்பி = மரக்கிளையில் தங்கும் குரங்கு. கப்பி-கபி.

     "கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப" (தொல். 1512).

     வடமொழியார் காட்டும் கம்ப் (நடுங்கு) என்பது மூல மாகாது.

சோம்பு-ஸோம (இ.வே.)

     சோம்புதல் = தூக்கமயக்கமா யிருத்தல், வேலை செய்யா திருத்தல்.
     L. somnus = தூக்கம்.

     ஸோமச்சாறு மயக்கந்தரும் கள்ளாதலால், அப் பெயர் பெற்றிருக்கலாம்.
மயக்கந் தருவதாகப் பண்டைக்காலத்திற் கருதப் பட்ட திங்களும்
வடமொழியில் ஸோம என்று பெயர் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

     வடவர் காட்டும் ஸு (பிழி) என்னும் மூலத்தினின்று ஸுத (சோமச்சாறு)
என்னும் சொல் திரிந்துள்ளது. அதுவே ஸோம என்பதற்கும் மூல மென்பது
பொருந்தாது.

வானரம்-வாநர

     வால்+நரம் = வாலுள்ள மாந்தன் போன்ற விலங்காகிய குரங்கு.

     வடவர் வனர் (வனம்) என்னும் சொல்லை மூலமாகக்கொண்டு
காட்டுவிலங்கு என்றும், நர ஏவ என்பதை மூலமாகக்கொண்டு மாந் தனைப்
போன்றது என்றும், பொருள் கூறுவர். முன்னதற்குப் பொருட் பொருத்தமும்
பின்னதற்குச் சொற்பொருத்தமும் இன்மை காண்க.

     வடமொழியில் இச் சொற்கு மூலமில்லை.

     Gk. anr, stem -ner, OL. nero, Skt. neron. L. nero, S. nard,
nru, Z. nar, OE. wer.

     நரம் அல்லது நரன் என்னும் சொல் நரல் என்பதினின்று
திரிந்திருக்கலாம். நரலுதல் = ஒலித்தல். மாந்தனுக்கு மொழி சிறப்பான
ஒலியமைப்பா யிருத்தல் காண்க.

9. தென்சொல்லை வடசொல்லாக்கிய வகைகள்

     (1) எழுத்துத் திரிப்பு. எ-டு: சுள்-சுஷ், பகு-பஜ்.

     திரிசொல் எழுத்து மாற்று. எ-டு: சாய்-சயன, ஸாயம், cƒyƒ