ஈரிடப்
பொது வடமொழிச் சுட்டுச் சொற்கள் |
எ-டு:
அத்ர = இங்கு, அங்கு
தத்
(d) = அவன், அவள், அது, இது.
இதம்
= இந்த; அங்கு.
ஏநா
= இங்கு, இவ்வாறு; அங்கு, அன்று.
சுட்டுச்சொற்கள்
போன்றே வினாச்சொற்களும், தமிழிலும்
திரவிடத்திலும் ஓரெழுத்துச் சொல்லாகவும் பலவெழுத்துச் சொல்லாகவும்
இருக்கும். எ-டு: எ, எந்த.
வினாவெழுத்துகள்
மூன்றென்றார் தொல்காப்பியர்.
"ஆஏ
ஓஅம் மூன்றும் வினாஅ." |
(தொல்.
32)
|
இவற்றையே
பவணந்தியார் ஐந்தாக விரித்துரைத்தார்.
"எயா
முதலும் ஆஓ ஈற்றும்
ஏயிரு
வழியும் வினாவா கும்மே" |
(நன்.
67)
|
இவ்
வைந்தும் மூல அளவில் ஓரெழுத்தாகவே தோன்று கின்றன.
ஏ-எ. ஏ-யா-ஆ-ஓ.
இவற்றுள்,
சொன்முதலில் வரும் எ, ஏ, யா என்னும் மூன்றும்
சுட்டெழுத்துப் போன்றே வகர மெய்யும் தகர மெய்யும் அடுத்து
வினாப் பெயராகும். எ-டு: எவன், எது.
எவை
என்பதன் திரிபான எவி என்னும் தெலுங்கச் சொல், அற்றுச்
சாரியை யேற்று வேற்றுமைப்படும்போது, வேட்டி எனத் திரியும். இங்ஙனமே
எவ், ஏவ் என்னும் வினாச் சொற்களும், முறையே வெ,வே என
முன்பின்னாக எழுத்துமுறை மாறி நிற்கும். இத் திரிபுகளின் வகர முதலே,
ஆரிய மொழிகளிற் ககரமாக மாறியுள்ளது. வெ-கெ-க. வே-கே-கா.
இவ்
வ-க திரிபு தெலுங்கையடுத்த மராத்தியிலேயே தொடங்கி
விடுகின்றது. மராத்தி முதலில் ஐந்திரவிடத்துள் ஒன்றாயும், பின்பு
நடுத்திரவிடம் என்று கருதத்தக்கதாயும், அதன்பின் ஐம்பிரா கிருதத்துள்
ஒன்றாயும், இருந்தமை கவனிக்கத் தக்கது.
தமிழ்
ஆரிய மொழிகட்கு முன்தோன்றிய தொன்மொழி யாதலின்,
அதில் நேரியல் வினாச் சொற்களும் உறவியல் (Relative) வினாச்
சொற்களும் வேறு பிரிக்கப்பெறவில்லை.
எ-டு:
யார் என்ன செய்தார்? - நேரியல்
யார் என்ன சொன்னாலும்
- உறவியல்
|