ஸம்வர்த்த,
ஆவர்த்த என்பன போன்ற முகிற்பெயர்களும், சங்கராபரணம், நாதநாமக் கிரியை என்பன
போன்ற பண்ணுப் பெயர்களும், இவைபோன்ற பிறவும், இடுகுறிச் சொற்களாம்.
ஆட்பெயர்கள்
இக்காலத்திற் பெரும்பாலும் இடுகுறி களாகவே எங்கும் இடப்பெறுகின்றன. தாரகாக்ஷன், கமலாக்ஷன்
என்பன போல வடமொழிப் புராணங்களில் வரும் படைப்புப் பெயர்கள் இடுகுறியுள் இடுகுறியாகும்.
பஞ்சதந்திரக் கதைகளுள் வரும் புனைபெயர்களும் இத்தகையனவே.
15.
வடசொற்கள் தென்சொற்களால் விளக்கம் பெறல்
|
பல
வடசொற்களின் வேர் தமிழிலும் திரவிட மொழிகளிலுமே காணக்கிடக்கின்றன.
எ-டு: புது-புதல் = அரும்பு. புதல்-புதல்வு-புதல்வன் = மகன்
புதல்வி
= மகள்.
புதல்வன்-புத்ர
= பிள்ளை, மகன் (இ. வே.); புத்ரீ = மகள். புத் என்னும் நரகத்தினின்று பெற்றோரை
மீட்பவன் புத்ர என்பது, வடவர் பொருந்தப் பொய்த்தலாகப் படைத்துக் கூறும் செய்தியாகும்.
இதற்குத் த்ரா (காப்போன்) என்னும் சொல் லுண்மையே துணையாம்.
புத்ர
என்னும் சொல்லின்கீழ், "etym. doubtful" என்றும், புத் என்னும் சொல்லின்கீழ்,
"a world invented to explain putra or put-tra" என்றும், மா. வி. அ. குறித்திருப்பது
கவனிக்கத்தக்கது. ஆயின், புஷ்2 (ஊட்டங் கொடு) என்பது மூலமா யிருக்கலாம்
என்று அது கருதுவதும் தவறாகும்.
சார்தூல
(வே.) = புலி, வேங்கை. இது சாரதோல என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபாகச் சொல்லப்படுகின்றது.
சார
= வரி. தோல = தோல். வரித்தோலையுடையது என்னும் பொருட்காரணம் பொருத்தமானதே.
இதற்கு
வடமொழியில் மூலமில்லை. மா.வி.அ. "of unknown derivation" என்று குறித்திருத்தல்
காண்க.
வடமொழி
எண்ணுப் பெயர்கள் பெரும்பாலும் தென்சொற் களாலேயே விளக்கம் பெறுவனவாயுள்ளன.
ஏக(k)
ஒ-ஒக்கல்
= ஒப்பு, இனம். ஒக்க = ஒப்ப, ஒருங்கு.
|