பக்கம் எண் :

116வடமொழி வரலாறு

ஸஹஸ்ர

     அயிர்=நுண்மணல். அயில்-அயிரம்-ஆயிரம் = மணல் போன்ற
     பெருந்தொகை.

     ஆயிரம் (அயிரம்) - ஹஸ்ர-ஸஹஸ்ர. ஸ’ முன்னொட்டு.

     இனி, . சாவிர, வ. ஸஹஸ்ர என்றுமாம்.

     இ.ஹஸார் (z), பெ. hazƒr.

லக்ஷ

     இலக்கம்-லக்ஷ = பெரிய இலக்கம் (எண்).

     கோடி ()

     கோடி-கோடி () = ஒழுங்கான கடைசி யெண்.

     அடுக்கிய கோடிப் பெயர்களாகிய குமுதம், சங்கம் முதலியன
தமிழினின்று கடன் கொண்டவையே. ஸமுத்ர என்பது வாரணம் என்பதன்
மொழிபெயர்ப்பாகும்.

16. வடவர் காட்டும் வேர்ச்சொற்கள் வேர்ச்சொற்களன்மை

     வேதமொழி வழக்கற்ற கலவைத் திரிமொழியாதலாலும், சமற்கிருதம்
அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழியாத லாலும்,
வடசொற்களினின்று பெரும்பாலும் வேர்ச்சொற்களை அறிய முடியாது.

     இடைகழி என்பது முறையே டேகழி, டேழி, ரேழி எனக் கொச்சை
வழக்கில் திரிந்துள்ளது. இடைகழி என்னும் சொல்லிற் போல் அதன்
கொச்சைத் திரிபுகளில் வேர்ச்சொல்லும் பொருளும் தோன்றவில்லை.
இங்ஙனமே, தமிழ் போன்ற இயன்மொழியில் தோன்றும் வேர்ச்சொற்கள்
ஆரியம் போன்ற திரிமொழிகளில் அத்துணைத் தெளிவாய்த் தோன்றா;
அவற்றுள்ளும், திரிபில் திரிபாகிய சமற்கிருதத்திற் பெரும்பாலும்
தோன்றவே தோன்றா.

     வடமொழியாளர் தம் மொழியைத் தேவமொழி யென்று காட்டி,
தமிழை என்றும் அதற்கு அடிப்படுத்தல் வேண்டி, வட சொற்களின்
முதனிலைகளை அல்லது முதலசைகளையெல்லாம் வேர்ச்சொல்லென்று
கொண்டு அவற்றைப் பிரித்துக் கோவைப் படுத்தி மொத்தம் 1,750
வேர்ச்சொற்களெனக் கணக்கிட்டிருக்கின் றனர். அவற்றுட் பல
பல்பொரு ளொருசொற்களாதலால், மேலையர் அவற்றை ஆய்ந்து
கண்டு வேர்ச்சொற்றொகையை 2,490 ஆகப் பெருக்கியுள்ளனர். ஆயின்,
சிறந்த ஆராய்ச்சியாளர் எல்லா வேர்ச் சொற்களையும் 120-ற்குள்
அடக்கிவிடலாம் எனக் கருதுகின்றனர்.