பக்கம் எண் :

இலக்கணவதிகாரம்125

எ-டு: "வல்லெழுத் தென்ப கசட தபற"
(தொல். 19)
 
  "வகரக் கிளவி நான்மொழி யீற்றது"
(தொல். 81)

     வடமொழி மெய்களும் தமிழ்முறைப்படியே அகரமொடு இயங்குகின்றன.
உயிர்மெய்கட்குள் குறிற்குக் கரமும் நெடிற்கு மெய்ச் சாரியையொடு கூடிய
உயிர்நெடிற் சாரியையும் சாரியையாம்.

எ-டு: ககரம் (க), ககர ஆகாரம் (கா).
ஆய்தத்திற்கு அ-கேனம் என்பது சாரியையாம்.

எ-டு. அஃகேனம். இது தொல்காப்பியத்திற் சொல்லப்பெற
வில்லை.

     இங்ஙனம் தமிழெழுத்துச் சாரியை யொழுங்கு நிறைவாக அமைந்துள்ளது.

     வடமொழியார் கரம், காரம் என்னும் இரண்டையே தமிழினின்று
கொண்டுள்ளனர். அதோடு குறிற்கு இரண்டையும் வேறுபாடின்றி ஆள்வர்.
இதனாற் சாரியை யமைப்பின் தமிழ்மூலம் தெளிவாகத் தெரிகின்றது. கரம்,
காரம் என்பன வடமொழியில் கர, கார என்று ஈறுகெட்டு நிற்கும். சாரியை
என்னுங் குறியீடும் வடமொழியி லில்லை.

"ரகார ழகாரம் குற்றொற் றாகா" (தொல். 49)

"உஊ காரம் நவவொடு நவிலா" (தொல். 74)

     என்பன போன்றவற்றைச் செய்யுள் திரிபில் அடக்குதல் வேண்டும்.

"கரமும் கானும் நெட்டெழுத் திலவே" (தொல். 135)

     என்று விலக்கியபின்,

"ஐகார ஒளகாரங் கானொடுந் தோன்றும்" (தொல். 137)

     என்று தொல்காப்பியரே முரண்படக் கூறுவதால்,

"வரன்முறை மூன்றும் குற்றெழுத் துடைய"
(தொல்.136)

     என்று அவர் குறித்திருப்பது குமரிநாட்டு வழக்கொடு பொருந்
தியதாய்த் தோன்றவில்லை.

(4) முறை

     மேலையாரிய மொழிகட்குள் ஒன்றிற்காவது முறை என்னும்
எழுத்திலக்கணம் இன்றுமில்லை. வேத ஆரியர் எழுத்தும்