மெய்க்கு
அரையும் குறிற்கு ஒன்றும் நெடிற்கு இரண்டும் மாத்திரை
என்பது இருமொழிக்கும் பொது. வடமொழியில் புலுதம் என்னும்
அளபெடையையும் உயிர் அல்லது உயிர்மெய் வகைகளுள் ஒன்றாகச்
சேர்த்து, அதற்கு மும்மாத்திரை என வகுத்துள்ளனர்.
அளபெடை
தமிழிலும் உண்டு. ஆயின் அதை ஒழுங்கான உயிர்
வகையாகக் கொண்டிலர். ஏனெனின், அது உலகியல் அல்லது இயற்கை
யளபெடையில் மும்மாத்திரை முதல் பத்து அல்லது பன்னிரு
மாத்திரைவரை நீண்டளபெடுக்கும். செயற்கையாகிய செய்யுளில்
அளபெடை குறுகியொலிப்பினும், அருகியும் திட்ட மான மாத்திரை
வரம்பின்றியுமே நிகழும்.
அளபெடையையும்
ஓர் உயிர்வகையாகக் கொண்டது வடமொழி
யிலக்கணத்தின் பின்மையையே காட்டும்.
(6) வடிவம்
வடமொழிக்கு
முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ் நாட்டில்தான்.
அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்த வெழுத்து. அதன் காலம்
தோரா. கி. மு. 10ஆம் நூற்றாண்டு.
ஐந்திரம்
என்னும் வடமொழி வியாகரணம் தொல்காப் பியத்திற்கு
முந்திய நூலாதலால், வடமொழிக் கிரந்தவெழுத்து அதற்கு ஓரிரு
நூற்றாண்டு முற்பட்டதா யிருத்தல் வேண்டும்.
கிரந்தம்
என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு
மொழியின்மையால், நூலிற்குமட்டும் பயன்படுத்தப்பெற்ற எழுத்தைக்
கிரந்தாட்சரம் என்றனர்.
இன்றுள்ள
தேவநாகரி கி. பி. 4ஆம் நூற்றாண்டிற் கருக்கொண்டு
11ஆம் நூற்றாண்டில் முழுநிறைவடைந்தது. அதையும் உற்றுநோக்கின்
அதற்கும் கிரந்தவெழுத்திற்குமுள்ள நுண்ணிய வடிவொப்புமை புலனாகும்.
தேவமொழி
யென்னும் வடமொழிக்கு நகரங்களில் ஆளப் பெற்ற
எழுத்து தேவநாகரி. தேவர் நகரங்களில் ஆளப்பெற்றது தேவநாகரி என்பர்
வடமொழியாளர். அவர் தேவரென்று நாணாது குறிப்பது பிராமணரை.
சில
எழுத்துகளின் வடிவங்கள்:
எழுத்து |
வடிவம் |
|
|
அனுநாசிகம் |
|
|
|
ஜிஹ்வாமூலீய
|
-
(k, kh ஆகியவற்றின் முன்) |
|
|
உபத்மானீய
|
-
(p, ph ஆகியவற்றின் முன்) |
|