தமிழ்க்
கையெழுத்தில் சில கூட்டெழுத்துகளை ஆள்வது போல்,
வடமொழி அச்செழுத்தில் ஏராளமான கூட்டெழுத்துகளை
அமைத்திருக்கின்றனர். அவை சந்தியக்ஷரம் எனப்படும்.
எ-டு
: க்ஷ- க்ஷ, ச்ரீ- ஸ்ரீ
இவை
கிரந்தம். இங்ஙனம் தேவநாகரியில் ஏராளமாகவுண்டு.
மெய்யைக்
குறிக்கக் கிரந்தத்தில் மேற்புள்ளியும் தேவ நாகரியிற்
கீழிழுப்பும் இட்டதும், இருவகை யெழுத்திலும் உயிர் மெய்க்குத் தனி
வடிவமைத்ததும், முற்றும் தமிழைப் பின்பற்றியே.
(7) புணர்ச்சி
எழுத்துப்
புணர்ச்சி, சொற்புணர்ச்சி எனப் புணர்ச்சி இரு வகைப்படும்.
தமிழிலக்கணத்தை
முதன்முதல் ஆய்ந்து கண்டு நூலியற்றி யவர்
தலைசிறந்த முனிவர் என்பது,
"வினையின்
நீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்" |
(தொல்.1594)
|
என்னும்
தொல்காப்பிய நூற்பாவால் விளங்கும்.
முனிவர்
மெய்ப்பொருளுணர்வு முதிர்ந்தவராதலின், உலகிலுள்ள
எல்லாப் பொருள்களும் உயிர், உயிரில்லது (மெய்), உயிருள்ளது
(உயிர்மெய்) என மூவகையாக இருக்கக்கண்டு, அவற்றையொத்த மூவகை
எழுத்தொலிகட்கும் அவற்றின் பெயரையே உவமையாகு பெயராக இட்டு,
உயிர்மெய்க்குத் தனி வடிவம் அமைத்தனர்.
இதனால்,
உயிர்மெய்யொலியை உயிரும் மெய்யுமாக முதன்முதற்
பகுத்தவர் தமிழர் என்பதும், உயிர்மெய்யிலேயே எழுத்துப் புணர்ச்சி
தோன்றிவிட்டதென்பதும் தெளிவாம்.
சொற்புணர்ச்சி
எல்லா மொழிகளிலு முண்டு. ஆயின், இயன்
மொழியிலேயே புணர்ச்சி ஒழுங்காகவும் புணர்ச்சொற்கள் எளிதாய்ப்
பகுக்கக் கூடியனவாகவு மிருக்கும். திரிமொழிகளில் தனிச்சொல்லும்
கூட்டுச் சொல்லும் பெரும்பாலும் திரிந்திருப்ப தாலும், திரிபுபுணர்ச்சி
நிகழவேண்டிய விடத்தும் இயல்பு புணர்ச்சியே பெரும்பான்மையாய்
நிகழ்வதாலும், திரிபு புணர்ச்சி நிகழ்ந்தவிடத்தும் அது வரிவடிவிற்
காட்டப் பெறாமையாலும், அவற்றிற் புணர்ச்சியிலக்கணம் வகுக்கப்
பெரிதும் இடமில்லை.
சமற்கிருதம்
திரிமொழியாயினும், தொன்றுதொட்டுத் தமிழொடு
தொடர்பு கொண்டமையானும், ஐந்தி லிருபகுதிக்குக்
|