பக்கம் எண் :

இலக்கணவதிகாரம்129

     குறையாது தமிழாயிருத்தலானும். தமிழைத் தழுவியே இலக்கணஞ்
செய்யப் பெற்றமையானும், புணர்ச்சியிலக்கணம் அதற்கமைந்த தென்க.
ஆயினும், திரிமொழியாதலின், தமிழ்ப் புணர்ச்சிபோற் பெரும்பாலும்
ஒழுங்குபடாது எத்துணையோ விலக்குகளைக் கொண்டுள்ளதென அறிக.

     வடமொழிப் புணர்ச்சியும் தமிழ்ப் புணர்ச்சி போன்றே உயிரீறும்
மெய்யீறும்பற்றி இருவகைப்படும். உயிரீற்றுப் புணர்ச்சியை அச்ஸந்தி
அல்லது ஸ்வரஸந்தி என்றும்,மெய்யீற்றுப் புணர்ச்சியை ஹல்ஸந்தி
என்றுங் கூறுவர்.

     உயிரீற்றுப் புணர்ச்சியில் குணம், விருத்தி என்னும் இருவகை
உயிர்த்திரிபுகள் வடமொழிக்குச் சிறப்பானவை. இன்னின்ன சிற்றுயிர்
கட்கு (simple vowels) இன்னின்ன வுயிர்கள் அல்லது அசைகள் குணம்
என்றும், இன்னின்ன வுயிர்கள் அல்லது அசைகள் விருத்தி என்றும்
வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பின்வருங் கட்டமைப்பிற் கண்டு
கொள்க.

இயலுயிர் இ,ஈ உ,ஊ ரு,ரூ லு
           
குணவுயிர் அர் அல்
           
விருத்தியுயிர்
ஒள ஆர் ஆல்

     தீர்க்கஸந்தி என்னும் மூவகை நெடிற்புணர்ச்சி, குளாம்பல் (குள
ஆம்பல்), புதூர் (புது ஊர்) என்னும் மரூஉப் புணர்ச்சி யொத்தவையே.

     தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் முப்புணர்ச்சித் திரிபுகளும்,
ஆகம(ம்), ஆதேச(ம்), லோப(ம்) என மொழிபெயர்க்கப் பட்டுள.

"எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே"
(நன். 57)

     என நன்னூலார் கூறும் பன்னிருவகை எழுத்திலக்கணங்களுள்,
முதல் ஈறு இடைநிலை என்னும் மூன்றும் திரிமொழியாகிய வடமொழிக்
கில்லை.

(8) வடமொழியெழுத்துப் பெருக்கம்

கிரேக்கக் குறுங்கணக்கு (24)

     A (a and ƒ), B, G (g and n(), D, F, Z, E, TH, I (i and i),
K, L, M, N, O,X, P , R, S (s and z), T, U (u and ), PH, KH,
PS,