யாளர்
கூறுவர். வடமொழியையே தேவமொழி யென்பார் இங்ஙனங்
கூறுவதில் வியப்பொன்றுமில்லை. ஆயினும் துணிச்சலான ஏமாற்றே.
அஷ்டாத்யாயீ
என்னும் பாணினி யிலக்கணத்தின் மூலபாடத் தில்
இவை சேர்க்கப்பெறாமையாலும், பாணினீய நூற்பாக்கள் போல்
அதிகாரவியல் எண் பெறாமையாலும், நன்னூற் பொதுப் பாயிர
நூற்பாக்கள்போல் முன்னரே பலராற் செய்யப்பட்டு வழிவழி திருந்தி
வந்தவையாயு மிருக்கலாம்.
இந்
நூற்பாக்களின் இறுதியெழுத்துகட்கு இத் என்று பெயர்.
ஒரு நூற்பாவின் முதலெழுத்தையும் அதன்பின் வரும் ஓர் இத்தையும்
சேர்ப்பின் ப்ரத்யாகார என்னுங் குறியீடாகும். அக் குறியீடு, அதன்
முதலெழுத்தையும், அதன் ஈரெழுத்திற்கும் இடைப்பட்ட இத்தல்லா
எல்லா நூற்பா எழுத்துகளையும் குறிக்க உதவும்.
இம்
முறையில், அண் என்பது அகரத்தையும் அகர இகர
வுகரங்களையுங் குறிக்கும். அச் என்பது எல்லா உயிர்களையும், ஹல்
என்பது எல்லா மெய்களையும், அல் என்பது எல்லா உயிர்களையும்
மெய்களையும் குறிக்கும்.
இதனால்,
மேற்கூறிய பதினால் நூற்பாக்கட்கும் பிரத்தியாகார
சூத்திரங்கள் என்றும் பெயர்.
எல்லா
மொழிகளிலும் இலக்கணவகைச் சொற்கள் பெயர், வினை,
இடை என மூன்றே. இவை சிக்ஷை, நிருக்தம் என்னும் தொடக்க
வடநூல்களில், நாம(ம்), ஆக்யாத(ம்), நிபாத(ம்) எனக் குறிக்கப்பட்டன.
பாணினி இவற்றை முறையே சுபந்தம், திஙந்தம், அவ்யய(ம்) எனக்
குறித்தார்.
உபஸர்க்கம்
என்னும் முன்னொட்டு நிபாதத்துள் அடங்கும்.
ஆரியர்
இந்தியாவிற்கு வருமுன்பே, நாமம் என்னுஞ் சொல்
மேலை யாரியத்தில் namon, nomen என்று வழங்கியதாகத் தெரிவ தாலும்,
தியூத்தானியத்தில் வினையாகவும் வழங்கி வருவதனாலும், ஒருகால் அது
மேலையாரியச் சொல்லாக இருப்பினும் இருக்கலாம். ஆக்யாத (kh)
என்னும் சொல், சொல் என்றே பொருள்படுவது. இது பொருளிலும்
ஆட்சியிலும் verb (L. verbum) என்னும் ஆங்கிலச் சொல்லை யொத்தது.
கியா=சொல். verb=சொல். நிபாத என்பது நிபத் என்னும் கூட்டு
முதனிலையினின்று திரிந்தது. நீ=கீழ். பத்=விழு. நிபாத = நெறிதிறம்பியது,
ஒழுங்கற்றது. படி(த.) - பத்.
|