பக்கம் எண் :

144வடமொழி வரலாறு

3. தொடரியல்

(1) தொகைச்சொல் (ஸமாஸ)

     வேதமொழியின் மூலமாகிய மேலையாரிய முறைப்படி சமற் கிருதச்
சொற்றொடரமைப்பு ஒருமருங்கு வேறுபட்டிருப்பினும், வேதமொழியின்
வடதிரவிட அல்லது பிராகிருதக் கலப்பினாலும், சமற்கிருதத்தின் தமிழ்த்
தொடர்பினாலும், அது ஒருமருங்கு தமிழை யும் தழுவியுள்ளது.

     சமாசம் என்னும் சமற்கிருதக் கூட்டுச்சொற்கள் அல்லது தொகைச்
சொற்கள் பின்வருமாறு ஐவகைப்படும்:

     (1) துவந்துவம் (த்வந்த்வ) உம்மைத் தொகை

     (2) தற்புருடன் (தத்புருஷ) வேற்றுமைத் தொகை

     (3) கருமதாரயன் (கருமதாரய) பண்புத்தொகை (இருபெயரொட்டு)

     (4) பகுவிரீகி (பகுவ்ரீஹி) அன்மொழித் தொகை

     (5) அவ்வியயீபாவம் (அவ்யயீபாவ) இடைச்சொல்லியல் தொகை
       அல்லது வினையெச்சவியல் தொகை

     ஸமாஸ என்னும் சொல்லை, ஸம்+அஸ்2 என்று பகுப்பர். ஸம்
= கூட.

     அஸ்-எறி. ஸமாஸ = (இருசொல்லை) உடனிட்டது.

     கருமதாரயனைப் பல இலக்கண நூல்கள் தற்புருடனில் அடக்கிக்
கூறும். அது பொருந்தாது. எண்ணுப் பண்புத் தொகையைத் தனியாய்ப்
பிரித்துத் த்விகு என்று பெயர் கொடுப்பர்.

     பொதுவாக நோக்கின், வடமொழிச் சமாசப் பகுப்பினும் தமிழ்த்
தொகை தொடர்ப் பகுப்பு மிகச் சிறந்தது.

அடுக்குத்தொடர் (வீப்ஸா)

     தமிழிற் போன்றே வடமொழியிலும் சொற்கள் அடுக்கி வரலாம்.

      எ-டு: வ்ருக்ஷம் வ்ருக்ஷம் ஸிஞ்சதி = மரம் மரமாய்த் தண்ணீர்
ஊற்றுகிறான்.

(2) சொற்றொடர் (வாக்ய)

     வடமொழிச் சொற்றொடர்ச் சொல்வரிசை பெரும்பாலும்
தமிழ்முறையை ஒத்ததே.

     எழுவாய் முன்னும், செயப்படுபொருள் இடையும், பயனிலை
பின்னும் ருவதே இயல்பான முறை.

     பாலக: க்ரந்தம் படதி = பையன் பொத்தகத்தைப் படிக்கிறான்.