செய்யுட்பகுதி
வேதமொழியும், உரைநடைப் பகுதி சமற்கிருதத்
தொடக்கமும் ஆகும். வேதமொழியும் அக்காலத்து வட்டார மொழிகளாகிய
பிராகிருதங்களும் கலந்ததே சமற்கிருதம். அது வான்மீகி யிராமாயணத்தொடு
முழுவளர்ச்சியடைந்தது.
மந்திரம்
என்னும் சொல்லும் வேதப் பெரும்பிரிவுப் பெயர்களான
மண்டலம், காண்டம் என்பனவும், தென்சொல்லே யென்பது முன்னரே
விளக்கப்பெற்றது.
வேதக்காலம்
தோரா. கி.மு. 1500 - 1000
வேதக்காலத்
திறுதியில் வேத ஆரியர் வடஇந்தியா முழுதும் பரவிப்
பல்வேறிடங்களி லிருந்ததால், வேதங்களைத் தொகுத்த போது
இடத்திற்கேற்ப வேறுபட்டிருந்தன. அவ் வேறுபாடுகள் சாகைகள்
எனப்பட்டன. சாகை கிளை. வேத ஆரியரின் முன்னோர் மொழி இருக்கு
வேதத்திற்கு முன்பே வழக்கற்றுப்போனமையும், அவ் வேறுபாட்டிற்குக்
காரணமாம். ஆரியமொழி வழக்கறவிற்குப் பேசினார் தொகைச் சிறுமையும்
பேசிய மொழியின் செயற்கை வளர்ச்சியுமே காரணம். ஒவ்வொரு வேதத்
தொகுப்பிற்கும் ஸம்ஹிதை என்று பெயர்.
வேதக்காலத்திலேயே
இந்திய ஆரியர்க்குத் தென்னாட்டொடு
தொடர்புண்டாய்விட்டது.
இதற்குச்
சான்றுகள் :
(1) |
இருக்கு
வேதத்தில் மேலையாரியத்தி லில்லாத தமிழ்ச்
சொற்களும் சாமசாகையில் எகர ஒகரமு முண்மை. |
|
|
(2) |
மாவலி
என்னும் சேரவேந்தன் குறள் தோற்றரவு (வாமனா
வதார)க் கதையொடு தொடர்புபடுத்தப்பட்டிருத்தல். |
|
|
(3) |
சத்திய
விரதன் என்னும் பெயரால், ஒரு தமிழவரசன் (திரவிடபதி) மீனத் தோற்றரவு (மச்சாவதார)க்
கதையொடு
தொடர்புபடுத்தப் பெற்றிருத்தல். |
|
|
(4) |
பரசுராமன்
சேரநாடு வந்து தவஞ் செய்ததாகச் சொல்லப்
படுதல். |
|
|
(5) |
அகத்தியரும்
நாரதரும் தென்னாடு வந்து தமிழ் கற்றுத்
தமிழ்நூ லியற்றியதாகக் கதையுண்மை. |
|
|
|
தமிழ்ப்
பொருளிலக்கணம் வகுத்த அந்தணர், அரசர், வணிகர்,
வேளாளர் என்னும் நாற்பாற் கிளவித்தலைவர் வகுப்பை
மூலமாகக் கொண்ட பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்
்என்னும் மக்கட்பாகுபாடு வேதக் காலத்திலேயே
செய்யப்பட்டமை. |
|