ஆயினும்
வடமொழியாளர் பத்யம் (செய்யுள்), கத்யம் (உரைநடை) ,
சம்பு (செய்யுளும் உரைநடையுங் கலந்த கலவை) என மூவகையாகக் காவிய
நூல்களை வகுத்திருக்கின்றனர்.
இனி,
படிக்கப்பட்டுக் காதால் மட்டும் கேட்கப்பெறுவது சிரவியம்
(ச்ரவ்ய) என்றும், படிக்கப்படுவதுடன் நடிக்கவும்பட்டுக் கண்ணாலுங்
காணப்பெறுவது திருச்சியம் (த்ருச்ய) என்றும், வேறும் இருவகையாகக்
காவியங்களை வகுத்துள்ளனர். திருச்சியம் என்பது நாடகக் காவியம்.
காளிதாஸன்
முதல் நாகராஜ கவிவரை 54 காவிய வாசிரியர்
பெயர்களும், அவர்களியற்றிய நூற்றுக்கணக்கான பத்திய காவியங் களும்,
P.S. சுப்பிரமணிய சாத்திரியார் இயற்றிய 'வடமொழி நூல் வரலாறு'
என்னும் நூலிற் குறிக்கப்பெற்றுள.
பத்திய
காவியம் என்னும் வனப்பியற்றிய பாவலருள் தலை
சிறந்தவர் காளிதாசர். அவரியற்றிய குமாரஸம்பவம், மேக ஸந்தேஸம்,
ரகுவம்சம், ருதுஸம்ஹாரம் என்னும் கேள்வி வனப்புகளும், மாளவி
காக்னிமித்ரம், விக்ரமோர்வசீயம், சாகுந்தலம் என்னும் காட்சி
வனப்புகளும் உலகப் புகழ்பெற்றவை. காளிதாசன் காலம் கி.பி.
2ஆம் நூற்றாண்டா யிருக்கலாம்.
விருத்த விலக்கணம்
விருத்த
விலக்கணங் கூறும் நூல்கள், காளிதாஸரின் ச்ருத போதம்,
கேதாரபட்டரின் விருத்த ரத்நாகரம், ஸோமேந்திரரின் ஸு விருத்த திலகம் முதலியன.
வடமொழி விருத்தம் வேறு; தமிழ் மண்டிலச் செய்யுள் வேறு.
பின்னதை விருத்தம் என்பது வழுவாம்.
நாடகம்
காளிதாஸன்,
அச்வகோஷன், ஸ்ரீஹர்ஷன், பவபூதி முதலியோர்
இயற்றிய வடமொழி நாடக நூல்களும் நூற்றுக்கணக்காக வுள. அவை
ஆங்கில நாடக நூல்கள் போன்றன.
பிற்காலச் சோதிடம்
ஸூர்ய
ஸித்தாந்தம் (கி.பி. 300), ஆர்யபட்டரின் ஆர்யபட் டீயம்
(கி.பி. 476), வராஹ மிஹிரரின் ப்ருஹத் ஸம்ஹிதை, பஞ்ச ஸித்தாந்திகை
(கி.பி. 505-78) ப்ரும்மகுப்தரின் ப்ராம்மஸ்புட ஸித்தாந்தம் (கி.பி. 598),
பாஸ்கராச்சாரியாரின் ஸித்தாந்த ஸிரோமணி (கி.பி. 1114).
அலங்காரம்
வடமொழியில்
முதன்முதற் சிறப்பாகக் காவ்யாதர்சம் என்னும்
அணியிலக்கணம் தொகுத்தவர் தண்டி. இவர் தென்னாட்டார்;
|