பக்கம் எண் :

தமிழ்மறைப்பதிகாரம்157

4

தமிழ்மறைப்பதிகாரம்

     வேதப் பிராமணர், தம்மை நிலத்தேவரென்றும் தம் முன்னோர்
மொழியைத் தேவமொழியென்றும் கூறி யேமாற்றித் தமிழ்நூல்களை
யெல்லாம் வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டபின், தமிழ் முதல்
நூல்களும் தமிழ்த் தூய்மையும் இருக்கும்வரை என்றேனும் தம் ஏமாற்றம்
வெளியாகிவிடுமென் றறிந்து, அதைத் தடுத்தற்கு அரசரும்
பொதுமக்களுமான தமிழ்ப்பேதைகளையும் தந்நலக்காரரையுந்
துணைக்கொண்டு, நூலுரையாலும் பிற செயலாலும் பல்வேறு மறைப்பு
வினை களையும் அழிப்பு வினைகளையும் செய்துவந்திருக்கின்றனர்.
அவற்றையே அவர் வழியினரும் கையாண்டு வந்திருக்கின்றனர்.

     மூவகை வினைகளும் வருமாறு :

     சொன் மறைப்பு, சொற்பொருள் மறைப்பு, முதனூல் மறைப்பு, கழகக்
கலைப்பு, முன்னூலழிப்பு, கலை மறைப்பு, அறிவியல் மறைப்பு, தெய்வ
மறைப்பு, சமய மறைப்பு, கொள்கை மறைப்பு, கருத்து மறைப்பு, ஒழுக்க
மறைப்பு, நாகரிக மறைப்பு, பண்பாடு மறைப்பு, கருப்பொருள் மறைப்பு,
அறிவு மறைப்பு, மொழி மறைப்பு, எழுத்து மறைப்பு, கழக மறைப்பு,
வரலாறு மறைப்பு, தமிழன் பிறந்தக மறைப்பு, தமிழ்நாடு மறைப்பு, தமிழ
இனமறைப்பு, வனப்புக்கதை மறைப்பு, பொருளிலக்கண மறைப்பு, புலவரை
மறைப்பு, மொழியாக்க முயற்சித் தடுப்பு, தனித்தமிழ் வழக்குத் தடுப்பு,
தமிழ்ப்பற்றுத் தடுப்பு, தமிழ் விழாத் தடுப்பு, தமிழ்ப்புலவர் பதவிப்பேறு
தடுப்பு, தமிழ்த்தொண்டர் வாழ்வுத் தடுப்பு முதலியன.

     கடல்கோளும் நிலநடுக்கமும் போன்ற இயற்கைப் பேரழிவு ஏதும்
நேராதுபோயினும், தமிழகத்தில் ஆரியம் வேரூன்றின தினாலேயே
கடைக்கழகம் கலைக்கப்பட்டது. அதன்பின், முதலிரு கழக நூல்கள்
அத்தனையும் அழிக்கப்பட்டுவிட்டன.