பக்கம் எண் :

முடிபதிகாரம்169

5

முடிபதிகாரம்

 

1. தேவ மொழியொன்று தேரின் உலகிலில்லை
யாவும் நிலமக்கள் யாத்தனவே - சாவினால்
தெய்வ நிலைமையெனின் தேவ ருலகினையே
எய்தி விடுதல் இயல்பு.
   
2. ஆரியம் தேவமொழி யாகு மெனின்மேலை
யாரிய மெல்லாம் அதுவாகும் - ஆரிய
நான்மறை தெய்வமெனின் நானிலத் தேனைமொழி
நூன்மறை மேலாம் நுவல்.
   
3. இந்திய ஐரோப் பியமென்னும் மாமரத்தின்
முந்திய ஆணிவேர் முத்தமிழாம் - பிந்திய
உச்சாணிக் கொம்பே உரப்பும் வடமொழியாம்
அச்சேது மின்றி யறை.
   
4. இயல்பே திரிபே யெனுந்தமிழின் பாங்கில்
இயல்பே தமிழாகும் என்க - அயலாம்
திரிபே திரவிடமாம் தேரினதன் முற்றே
மருவும் வடமொழி மாண்பு.
   
5. வடமொழியே தெய்வ வகைமொழியேல் அந்த
மடமொழியின் மூலந் தமிழாம் - திடமொழி
தெய்வத்தின் தெய்வத் திருமொழி யென்றின்றே
உய்வுற்றுச் சீராக வோம்பு.
   
6. சொற்பொருள் யாப்புஞ் சுவையாம் அணியியலும்
நற்புல நூலுமே நல்வளமாம் - வற்பொலியின்
மூச்சுங் கனைப்பும் மொழியின் சிறப்பாயின்
ஓச்சங் கழுதை யுலகு.
   
7. எல்லா வகையாலும் எண்ணினா லிவ்வுலகில்
எல்லேர் தமிழுக் கிணையில்லை - அல்லாச்
சிறந்த மொழியெல்லாம் செந்தமிழ்போ லன்றி
இறந்த மொழியாகும் இன்று.