3.
வெற்றிச் சின்னம்.
"பருதி.....விருதுமேற்
கொண்டுலாம் வேனில்" (கம்பரா. தாடகை.5)
வடவர்
காட்டும் மூலம்:
வி-ருத்
(d)=அழு, கரை, ஏங்கு, புலம்பு, துயர்கொண்டாடு.
விருத=புகழ்ச்சிச்
செய்யுள், பாடாண்பாட்டு, ஏத்துரை.
இரங்கற்
செய்யுளாகிய கையறுநிலையில் ஒரு தலைவனை அல்லது
வள்ளலைப் புகழ்ந்து பாடுவது வழக்கமேனும், அழுகைக் கருத்தில்
வெற்றிக்கருத்துத் தோன்றுமா என்பதை அறிஞர் ஆய்ந்து காண்க.
வில்வம்-பில்வ
(அ.வே.), வில்வ
விள்-விளம்
= வெள்ளையான தோடுடைய கனி.
விள்-விளா-விளவு-விளவம்.
விளம்-விளர்-விளரி = விளர்.
விளா-விளாத்தி.
விளவம்-விலவம்-வில்வம் = கருவிளத்திற் கினமான
கூவிளம்.
வடமொழியில்
மூலமில்லை.
விழி-வித் (d)
- (இ.வே.)
விள்ளுதல்
= விரிதல், திறத்தல். விள்-விழி.
விழித்தல்
= 1. கண் திறத்தல்.
"இமையெடுத்துப்
பற்றுவே னென்றியான் விழிக்குங்கால்"
(கலித். 144). 2. தூக்கந் தெளிதல்.
"உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு" (குறள். 339).
3.காணுதல்.
4.எச்சரிக்கையா யிருத்தல், முற்காப்பா யிருத்தல்.
5.
கவனித்து நோக்குதல்.
"நாட்டார்கள்
விழித்திருப்ப" (திருவாச. 5: 28).
6.
விளங்குதல், ஒளிர்தல்.
"பொன்ஞா
ணிருள்கெட விழிப்ப" (சீவக. 2283).
7.
அறிதல்.
விழி
= 1. அறிவு. 2. ஓதி (ஞானம்).
"தேறார்
விழியிலா மாந்தர்" (திருமந். 177).
L.
vide, E. vide, Skt. vid = to know.
வித்யா,
வித்வான், வைத்ய, வேத, வேதஸ் (dh) முதலிய பல சொற்கள்
வித் என்னும் மூலத்தினின்று பிறந்தவையே.
ஆகவே
ஆரியர்க்கு ஞானமும் வித்தையும் தமிழினின்றே தோன்றின
என அறிக.
|