பக்கம் எண் :

மொழியதிகாரம்99

     எழுகோள்களும் இருபத்தேழு நாண்மீன்களும் ஓர் ஆண்டு
வட்டத்தை யமைக்கும் பன்னிரு திங்கட்குரிய பன்னீரோரைகளும், தமிழர்
கண்டவையே. இன்று உலக முழுவதும் வழங்கிவரும் எழு
கோட்பெயர்களைக் கொண்ட எழுநாட் கிழமையமைப்பு, தமிழரதே.
ஆரியர் வந்தபின் அறிவன் (புதன்), காரி (சனி) என்னும் இரு
கிழமைப் பெயர்கள் வழக்கு வீழ்த்தப்பட்டதால், பண்டைத் தமிழர்
ஐங்கோளே அறிந்திருந்தனர் என்று கால்டுவெலார் பிறழ்ந்துணரவும்,
அதனால் உலக முழுவதும் தமிழ் நாகரிகத்தைத் தாழ்வாகக் கருதவும்
நேர்ந்துவிட்டது.

     பன்னீரோரைப் பெயர்களுள் மிதுன, ஸிம்ஹ, வ்ருச்சிக, தநு, மகர
என்னும் ஐந்தே மொழிபெயர்ப்பாகும்; ஏனையவெல்லாம் எழுத்துப்
பெயர்ப்பே.

     குமரிக்கண்டத்தில் பன்னீரோரைப் பெயர்களே பன்னிரு மாதப்
பெயர்களாய் வழங்கி வந்தன. ஆரியர் வந்தபின் அவை நாட்பெயர்களாக
மாற்றப்பட்டுவிட்டன.

7. இருபிறப்பிச்சொற்கள் (Hybrids)

     எ-டு: அல்(த.)+சிசிர(வ.) = அச்சிர (முன்பனி)

     கடா (த.)+அக்ஷ(வ.) = கடாக்ஷ (கடைக்கண்)

     கடை என்பது கட அல்லது கடா () எனத் திரிந்தது. கடாக்ஷி =
     கடைக்கணி.

     கட () என்னும் தனிச் சொல்லையும், கடைக்கண் பார்வை என்னும்
பொருளில் பாகவத புராணம் ஆண்டுள்ளது.

8. மயக்கச் சொற்கள்

(1) மருளற் குரியவை

     எ-டு: அதிகாரம்: இது முன்னரே விளக்கப்பெற்ற

ஆசை-ஆசா (அ.வே.)

     ஆசு = பற்று.

"ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ"
(புறம். 235)

     ஆசு-ஆசை = பற்று, விருப்பம், அவா.

     ஒ.நோ: பூசு-பூசை (பூனை). பொற்கொல்லர் பொன்னணி கலத்திடையே
இடும் பற்றும் ஆசெனப்படுதல் காண்க.

     ஆசிடையிட்ட எதுகை என்னும் செய்யுள் தொடையமைப் பையும்
நோக்குக. பற்று என்னுஞ் சொல் பற்றும் அல்லது பற்றப் பெறும்
பொருளைக் குறித்தல் போன்றே, ஆசு என்னும் சொல்லும் ஆசிற்குரிய
பொருளைக் குறிக்கும் என்க.